நாட்டின் முதுகெலும்பாக வேளாண் துறை பார்க்கப்படுகிறது. வேளாண் உற்பத்தி சீராக இருக்க வேண்டும், விவசாயிகளுக்கு தாராளமாக பணம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்த ஒரு திட்டம் தான் கிசான் கிரெடிட் கார்டு திட்டம்.
கிசான் கிரெடிட் கார்டு: இந்த திட்டத்தில் விவசாயிகள் 5 லட்சம் ரூபாய் வரை எளிதாக கடன் பெற முடியும். இந்தியாவை சேர்ந்த 18 இலிருந்து 70 வயதிற்கு உட்பட்ட விவசாயிகள், கூட்டு விவசாயிகள், குத்தகை விவசாயிகள் இந்த கிசான் கிரெடி கார்டுகளுக்கு விண்ணப்பம் செய்து பெற்றுக் கொள்ளலாம். இந்த கிரெடிட் கார்டுகள் மூலம் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

எதற்கெல்லாம் கடன்?: பயிரிடுவதற்கான உரம், விதைகள், பூச்சி கொல்லிகள் வாங்க, பயிரிட, அறுவடை செய்ய மற்றும் அறுவடைக்கு பிந்தைய செலவுகளுக்கும், அறுவடைக்குப் பின்னர் குறிப்பிட்ட அந்த பயிர்களை சந்தைப்படுத்துவதற்கும் கடன் பெறலாம். வேளாண் நிலங்களுக்கான பராமரிப்பு செலவுகளுக்கும் விவசாயம் சார்ந்த முதலீடுகளுக்கும் இந்த கடன் தொகையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.பயிர் காலம் மற்றும் அதனை சந்தைப்படுத்துவதற்கு தேவைப்படும் காலத்தை பொறுத்து கடனை திரும்ப செலுத்துவதற்கான காலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. பொதுவாக 5 ஆண்டுகள் வரை நாம் கடன் திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசம் கிடைக்கும்.
வட்டி எவ்வளவு?: இந்த திட்டத்தின் சிறப்பே விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைப்பது தான். இதில் 3 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படும். 3 லட்சம் ரூபாயை கடன் தாண்டும் போது வட்டி விகிதத்தை வங்கிகள் நிர்ணயம் செய்யும். இந்த திட்டத்தில் விவசாயிகள் கடன் தொகையை முறையாக செலுத்தும் போது அவர்களுக்கான 7 சதவீத வட்டியில் 4 சதவீதத்தை மட்டுமே செலுத்தினால் போதும், மீதமுள்ள 3 சதவீதத்தை அரசு மானியமாக வழங்கிவிடும்.
எப்படி விண்ணப்பம் செய்வது?: விவசாயிகள் விண்ணப்பிக்க விரும்பும் வங்கியின் இணையதளம் அல்லது அருகில் உள்ள வங்கி கிளைக்கு சென்று கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பம் செய்யலாம். வங்கிகள் உங்களின் விவரங்களை பெற்று கடன் பெற தகுதி உடையவர் என்றால் கடன் அட்டை வழங்கிவிடும். இதற்கு ஒரு வார காலம் தேவைப்படும். கிசான் கிரெடிட் கார்டு பெற்ற விவசாயிகள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த கார்டுகளைக் கொண்டு மொபைல் பேங்கிங் மூலமும் விவசாயிகள் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.
அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன?: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் கிசான் கிரெடிட் கார்டுகள் இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக மாறி இருக்கிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் 465 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ளதாக கூறி இருக்கும் நிர்மலா சீதாராமன், இதன் மூலம் 5.7 லட்சம் கோடி ரூபாய் வரை கிரெடிட் லிமிட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
குறுகிய கால பயிர் கடன்களை பெறுவது எளிது, சரியான நேரத்தில் கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 4 சதவீதம் மட்டுமே வட்டி விதிக்கப்படுகிறது என்றும் தன்னுடைய பதிவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஒவ்வொரு ஒரு லட்சம் ரூபாய் கிசான் கிரெடிட் கார்டு கடனிலும் முறையான கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகள் ஆண்டுதோறும் வட்டி தொகையில் மட்டும் 9,000 ரூபாயை சேமிக்க முடிகிறது என அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார் . கடந்த பட்ஜெட்டில் தான் மத்திய அரசு கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான கடன் வரம்பினை 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தியது.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications