நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் ஆதார் கார்டு மோசடிகள் நம் நாட்டில் அதிகரித்து விட்டன. ஆதார் கார்டு தகவல்களை திருடி அவற்றைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். ஆதார் நம்பர் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மாஸ்க்டு ஆதாரை அறிமுகப்படுத்தியது.
இந்தப் பதிவில் மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன, அதை எப்படி டவுன்லோட் செய்து வைப்பது? என்ற விவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன?: இந்திய குடிமக்களுக்கு பாதுகாப்பை வழங்கவும், மோசடி தொடர்பான அபாயத்தை குறைக்கவும் UIDAI மாஸ்க்டு ஆதாரை அறிமுகப்படுத்தியது. பொதுவாக ஆதார் கார்டில் 12 இலக்க தனித்துவ எண் இருக்கும். மாஸ்க்டு ஆதார் கார்டில் ஒருவருடைய 12 இலக்க ஆதார் நம்பரில் முதல் 8 நம்பர் மறைக்கப்பட்டு, கடைசி 4 நம்பர் மட்டுமே தெரியும்.
உதாரணமாக உங்களுடைய மாஸ்க்டு ஆதார் கார்டு வெர்ஷனை டவுன்லோட் செய்தால் அதில் முதல் 8 நம்பருக்கு பதிலாக "X" என்ற எழுத்து குறிப்பிடப்பட்டிருக்கும். கடைசி நான்கு நம்பர் மட்டுமே தெரியும்.
ஆனால் மற்ற விவரங்களான உங்களுடைய பெயர், முகவரி, புகைப்படம் போன்ற அனைத்து விவரங்களும் ஆதார் கார்டை போலவே இருக்கும், ஆதார் ப்ரூப்பை யாருக்காவது கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் முழு ஆதார் நம்பரையும் காண்பிக்கும் ஆதார் கார்டை கொடுப்பதற்கு பதிலாக மாஸ்க்டு ஆதார் கார்டை கொடுக்கலாம். இதன் மூலம் உங்கள் பிரைவசி பாதுகாக்கப்படும்.
தற்போது மோசடிக்காரர்கள் ஒருவருடைய OTP, வங்கி விவரங்கள், கை ரேகைகளை எடுக்க சிலிக்கான்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத சாதனங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படும் நபரின் வங்கி கணக்குகளில் உள்ள மொத்த பணமும் ஒரே கிளிக்கில் காலியாகி விடுகிறது. இதை தடுக்கும் பொருட்டு UIDAI கொண்டு வந்தது தான் இந்த மாஸ்க்டு ஆதார் கார்டு.
பலன்கள்: ஆதார் நம்பரை ப்ரூப்-ஆக வழங்கும்போது முழு நம்பரும் மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். குற்றவாளிகள் ஆதார் நம்பரை தவறாக தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை இது உறுதி செய்யும். மற்ற ஆதார் கார்டுகளை போலவே மாஸ்க்டு ஆதார் கார்டும் செல்லுபடியாகும். இதை பெறுவதற்கு பணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எளிதில் UIDAI இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் டவுன்லோட் செய்யலாம்.
மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் https://uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: "My Aadhaar" பிரிவின் கீழ் "Download Aadhaar" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: தற்போது வாரும் புதிய பக்கத்தில், 12 இலக்க ஆதார் நம்பர் அல்லது 16 இலக்க விர்ச்சுவல் ஐடியை (VID), தேவையான பிற விவரங்களுடன் என்டர் செய்யுங்கள்.
ஸ்டெப் 4: "Select your preference" என்ற பிரிவில், "Masked Aadhaar" என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 5: உங்கள் ஆதார் கார்டுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP பெறுவதற்கான ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: வெரிஃபிகேஷன் செயல்முறையை முடிப்பதற்கு OTP-ஐ என்டர் செய்யுங்கள்.
அதன் பின்னர் மாஸ்க்டு ஆதார் கார்டு PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். இது பாஸ்வோர்ட் ஆல் பாதுகாக்கப்பட்டிருக்கும். உங்களுடைய டேட் ஆப் பர்த் பாஸ்வேர்டை என்டர் செய்வதன் மூலம் பிடிஎப்-ஐ திறந்து பார்க்கலாம்.
மாஸ்க்டு ஆதார் கார்டு பாஸ்வேர்ட்: மாஸ்க்டு ஆதாரை திறந்து பார்ப்பதற்கான பாஸ்வோர்ட்: உங்கள் பெயரின் முதல் நான்கு கேப்பிடல் எழுத்துக்கள் மற்றும் நீங்கள் பிறந்த வருடம். உதாரணமாக உங்களுடைய பெயர் Varshini என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் நவம்பர் 9, 1999 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறீர்கள் என்றால் மாஸ்க்டு ஆதார் கார்டின் பாஸ்வேர்ட் "VARS1999" ஆகும்.


Click it and Unblock the Notifications