பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்போது, முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான காரணிகளில் ஒன்று PE விகிதம். இதை குறித்து பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு தெரிந்திருந்தாலும் பங்குச்சந்தை முதலீட்டுக்கு புதிதாக வந்தவர்களுக்கு கவனிக்க வேண்டிய ஒன்றாக இது உள்ளது.
PE விகிதம் என்பது ஒரு நிறுவனத்தின் பங்கு விலை மற்றும் அதன் லாபம் ஆகியவற்றுக்கு இடையேயான விகிதமாகும். PE விகிதம் ஒரு நிறுவனம் தனது லாபத்திற்கு எவ்வளவு விலை கொடுக்கின்றது என்பதைக் குறிக்கிறது.

PE விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? : ஒரு நிறுவனத்தின் PE விகிதம் இந்த பார்மூலா-வை வைத்து தான் கணக்கிடப்படுகிறது. PE விகிதம் = பங்கு விலை / லாபம். உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் பங்கு விலை ரூ 100 மற்றும் அதன் லாபம் ரூ 10 என்றால், PE விகிதம் 10 ஆகும்.
PE விகிதம் ஏன் முக்கியம்? : PE விகிதம் என்பது ஒரு நிறுவனம் அதிக மதிப்பில் இருக்கிறதா அல்லது குறைந்த மதிப்பில் இருக்கிறதா என்பதை தீர்மானிக்க உதவும் ஒரு முக்கியமான குறியீடாகும். PE விகிதம் அதிகமாக இருந்தால், நிறுவனம் அதிக மதிப்பில் இருப்பதாக அர்த்தம். PE விகிதம் குறைவாக இருந்தால், நிறுவனம் குறைந்த மதிப்பில் இருப்பதாக பொருள்.
PE விகிதம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? : PE விகிதம் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது, முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனம் அதிக மதிப்பில் இருக்கிறதா அல்லது குறைந்த மதிப்பில் இருக்கிறதா என்பதை தீர்மானிக்க PE விகிதத்தைப் பயன்படுத்தலாம். ஆய்வாளர்கள் ஒரு துறையின் மொத்த மதிப்பீடு செய்ய PE விகிதத்தைப் பயன்படுத்தலாம்.
சில எடுத்துக்காட்டுகள்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் தற்போதைய PE விகிதம் 23.64 ஆகும். இது துறை சராசரியை விட அதிகமாக உள்ளது.
இதேபோல் HDFC வங்கியின் தற்போதைய PE விகிதம் 17.39 ஆகும், இத்துறையில் PE விகிதம் 24.00 அதாலால் இது இத்துறை சராசரியை விட குறைவாக உள்ளது. PE விகிதம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முக்கியமான விஷயம்.
இந்திய பங்குச்சந்தையில் அதிக PE விகிதம் கொண்ட டாப் 10 நிறுவனங்கள்:
மேக்ஸ் பைனான்சியல் - 16,908.33
எஸ் வி குளோபல் மில் - 8,637.00
JITF இன்ஃப்ராலாஜிஸ் - 7,000.00
பிளாக் பாக்ஸ் - 5,222.00
சாஸ்தா சுந்தர் - 5,144.44
பிஷ்ஷர் இனோர்க் - 4,011.67
மெட்பிளஸ் ஹெல்த் - 3,439.35
நிதி கிரானைட்ஸ் - 3,333.33
இந்தியா ஹோம் லோன் - 3,183.00
நுரேகா - 3,019.17
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications