பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பலருக்கும் பல காரணங்கள் இருந்தாலும் இலக்கு அதிகமான பணத்தை சம்பாதிப்பது தான். உங்கள் நிதி இலக்குகளை அடைய உதவும் ஒரு சிறந்த வழி தான் பங்குச்சந்தை முதலீடு. பங்குச்சந்தையில் எந்த அளவுக்கு வேகமாகவும், அதிகப்படியாக சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளதோ, அதேவேகத்தில் பணத்தை இழக்கும் வாய்ப்புகள் உள்ளது.
இப்படி பங்குச்சந்தை முதலீட்டில் ரிஸ்க் அளவீட்டை குறைக்கும் முக்கியமான ஐடியா தான் பல்வகைப்படுத்துதல் இதை ஆங்கிலத்தில் diversification என கூறுவோம். பல்வகைப்படுத்துதல் என்பது உங்கள் முதலீட்டுகளை பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பரித்து முதலீடு செய்வதை குறிக்கிறது.

இதன் மூலம், ஒரு துறை அல்லது நிறுவனத்தில் ஏற்படும் ஏற்ற இழப்புகள் மொத்த முதலீட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. காரணம் பிற துறையில் அல்லது நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் லாபத்தை அளிக்கும் என்பதால் தான்.
உற்பத்தித்திறன் அதிகரிப்பு: பல்வகைப்படுத்தப்பட்ட முதலீடு நீண்ட காலத்தில் சிறந்த வருமானத்தை ஈட்ட உதவும். பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம், சந்தையில் ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். இதனால் உங்கள் முதலீடு தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே இருக்கும்.
மன அமைதி: பல்வகைப்படுத்தப்பட்ட முதலீடு உங்களுக்கு மன அமைதியை அளிக்கும். உங்கள் முதலீடு ஒரு துறையில் அல்லது நிறுவனத்தில் மட்டும் கவனம் செலுத்தப்படவில்லை என்பதால், சந்தை ஏற்ற இறக்கங்களின் போது நீங்கள் அதிக கவலைப்பட வேண்டியதில்லை. எப்படி ஆயினும் கணிசமான லாபத்தை அடைய முடியும் என்பதால் தான்.
IT துறை மற்றும் உற்பத்தி துறை: தற்போதைய வர்த்தக சூழ்நிலையில் எடுத்துக்கொண்டால் கடந்த சில மாதங்களாக IT துறையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க முதலீட்டாளர்கள் உற்பத்தி துறையில் முதலீடு செய்யது இழப்புகளை சமாளித்தனர்.
பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறு நிறுவனங்கள்: இதேபோல் பெரிய நிறுவனங்கள் நிலையான வருமானத்தை அளித்தாலும், அதே நேரத்தில் சிறு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும் திறன் கொண்டவை என்பதால் கூடுதல் ரிஸ்க் எடுத்து ஸ்மால் கேப், மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்ய முடியும்.
உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள்: உலக நாடுகளின் பொருளாதாரம் மோசமான நிலையை எதிர்கொண்டு வரும் வேளையில் உள்நாட்டு பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். தற்போது அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் பல இடத்தில் உள்ளதை மறந்துவிட வேண்டாம்.
வேகமாக பணத்தை சம்பாதிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்வது ஒரு சிறந்த வழி, ஆனால் ரிஸ்க் குறைக்க பல்வகைப்படுத்துதல் அவசியம். உங்கள் முதலீட்டுகளை பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பரப்புவதன் மூலம், சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாத்துக் கொண்டு நீண்ட கால அடிப்படையில் சிறந்த லாபத்தை ஈட்ட முடியும்.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications