தங்கம் விலை எவ்வளவு தான் உயர்ந்தாலும் இந்திய மக்கள் மத்தியில் தங்க நகையை வாங்கும் போக்கு சற்றும் குறைவது இல்லை. தங்கம் விலை ஏற ஏற மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் பணத்தை வைத்து தங்கத்தை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இன்றைய தேதியில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் கூட குறைந்தது 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள், மோசடியாளர்கள், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தங்களுடைய பணத்தை தங்கத்தின் பக்கம் திருப்பி விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது.

எனவே தான் தங்க நகை வாங்கும் போது சில கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன . அந்த வகையில் இந்தியாவில் ரொக்கமாக பணத்தை கொடுத்து தங்கத்தை வாங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. நீங்கள் தங்க நகை வாங்க கடைக்கு செல்கிறீர்கள் என்றால் குறிப்பிட்ட இந்த ஒரு ஆவணத்தை நிச்சயம் கையில் எடுத்துச் செல்லுங்கள் இல்லை என்றால் உங்களுக்கு தங்க நகையை வழங்க மாட்டார்கள்.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையின் படி 2 லட்சம் ரூபாய்க்கு மேல் நாம் தங்கம் வாங்கும்போது நம்முடைய பான் கார்டு விவரங்களை கட்டாயம் சமர்ப்பித்தாக வேண்டும். இன்றைய தேதியில் 2 பவுன் நகை வாங்க வேண்டும் என்றால் கூட இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் தேவை . எனவே நீங்கள் இரண்டு பவுனுக்கு மேல் நகை வாங்குகிறீர்கள் எனும் போது கட்டாயம் உங்கள் கையில் பான் கார்டு விவரங்களை கொண்டு செல்ல வேண்டும்.
நகை விற்பனை செய்யும் நிறுவனம் உங்களின் பான் கார்டு தகவல்களை பெற்ற பிறகு தான் உங்களுக்கு அந்த நகையே விற்பனை செய்வார்கள். எனவே 2 பவுனுக்கு மேல் தங்கம் வாங்க செல்பவர்கள் கையில் பான் கார்டு கொண்டு செல்லுங்கள். மேலும் ரொக்கமாக எவ்வளவு பணத்தை கொடுத்து தங்கத்தை வாங்கலாம் என்பதற்கான விதியும் இருக்கிறது. ஒரு நபர் ஒரு நாளைக்கு 2 லட்சம் ரூபாய் வரை கையில் ரொக்கமாக பணத்தை கொடுத்து நகை வாங்கலாம் . அதற்கு மேல் உள்ள தொகையை காசோலை அல்லது ஆன்லைன் அல்லது கார்டு பேமெண்ட் மூலம் மட்டுமே நகையாக வாங்க முடியும்.
எனவே ஒரு தனிநபர் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கொடுத்து தங்கம் வாங்க முடியாது, 2 லட்சம் ரூபாய் வரை ரொக்கமும் அதற்கு மேல் உள்ள தொகையை டிஜிட்டல் முறையிலும் தான் செலுத்த வேண்டும். அதே போல 2 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கும் போது பான் கார்டு கட்டாயம்.


Click it and Unblock the Notifications