இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் ஏற்றத்தோடு நிறைவு செய்தன. இதனால் வரும் வாரத்தில் பங்குச் சந்தையி்ன் போக்கு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் (செவ்வாய் முதல் வெள்ளி வரை) மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும். டிரம்பின் பரஸ்பர விதிப்பு, அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு உள்ளிட்டவை வரும் நாட்களில் பங்குச் சந்தைகளின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும், கடந்த வாரம் டிரம்ப் அறிவித்த இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பும் வரும் புதன்கிழமைதான் அமலுக்கு வர உள்ளது.

இவை சர்வதேச வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின வேலை வாய்ப்பு தரவு, வேலையின்மை விகிதம் போன்ற முக்கிய புள்ளிவிவரங்கள் இந்த வாரம் வெளிவருகிறது. அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் வரும் வெள்ளிக்கிழமையன்று உரையாற்ற உள்ளார். டிரம்பின் வரி விதிப்புக்கு மத்தியில் ஜெரோம் பவல் உரையாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை, ஏப்ரல் 2 மற்றும் 4ம் தேதிகளில் எச்எஸ்பிசி மானுபாக்சரிங் மற்றும் சேவைகள் பிஎம்ஐ வெளிவர உள்ளது. மேலும் வரும் 4ம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வார அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட உள்ளது.
வரும் 1ம் தேதி முதல் இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது 2025 மார்ச் மாத விற்பனை குறித்த விவரங்களை வெளியிட உள்ளன. இந்த மாதத்தில் வாகன விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த நிதிக் கொள்கை கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த 2 வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் நிகர முதலீட்டாளர்களாக இருந்தனர். வரும் வாரத்திலும் அவர்கள் இந்திய பங்குகளில் முதலீடு செய்தால் அது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் வாரம் எஸ்எம்இ பிரிவில், Infonative Solutions, Spinaroo Commercial, and Retaggio Industries ஆகிய நிறுவனங்களின் ஐபிஓ நிறைவடைகிறது. மேலும், Identixweb, ATC Energies System, Shri Ahimsa Naturals, and Desco Infratech போன்ற பங்குகள் மீது வரும் வாரத்தில் முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்யலாம்.
தொழில்நுட்ப ரீதியாக, நிஃப்டி 50 வரும் வாரத்தில் ஒருங்கிணைப்பு நிலைக்கு நுழைந்துள்ளதாக தெரிகிறது. ஆக, மேற்கண்ட காரணிகள் வரும் வாரத்தில் பங்குச் சந்தைகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications