பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் முதலீட்டு தகுந்த நல்ல ஆதாயம் தரும் பங்குகளை கண்டு பிடிப்பதில் முதலீட்டாளர்கள் சிரமப்படுகின்றனர்.
சில நிறுவனங்களின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் காலாண்டில் சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் வருவாய் வளர்ச்சி கண்ட ஒரு பத்து நிறுவனங்களை பார்ப்போம்.

1. அதானி க்ரீன் எனர்ஜி (Adani Green Energy): அதானி குழுமத்தை சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி, கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் மொத்த வருவாயாக ரூ.2,589 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 53.7 சதவீதம் அதிகமாகும். நிகர லாபம் 149 சதவீதம் உயர்ந்து ரூ.372 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது இந்நிறுவன பங்கின் விலை ரூ.1,026.55ஆக உள்ளது.
2. எல்.டி.ஐ.மைண்ட்ரீ (LTIMindtree):தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த நிறுவனமான எல்.டி.ஐ.மைண்ட்ரீ 2023 செப்டம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.8,569.70 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 செப்டம்பர் காலாண்டில் ரூ.7,949.40 கோடியாக இருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,133.60 கோடியாக உயர்ந்துள்ளது. இப்பங்கின் விலை தற்போது 5,574.40ஆக உள்ளது.
3. அப்டஸ் வேல்யு ஹவசிங் பைனான்ஸ் ( Aptus Value Housing Finance): வீட்டு கடன் வழங்கும் நிறுவனமான அப்டஸ் வேல்யு ஹவசிங் பைனான்ஸ், 2023 செப்டம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.268.57 கோடியும், நிகர லாபமாக ரூ.118.67 கோடியும் ஈட்டியுள்ளது. இது 2022 செப்டம்பர் காலாண்டில் முறையே ரூ.227.72 கோடி மற்றும் ரூ.106.79 கோடியாக இருந்தது. இப்பங்கின் விலை தற்போது 295.90ஆக இருந்தது.
4. சோனா பி.எல்.டபுள்யூ. பிரிசிஷன் (Sona BLW Precision): வாகன உதிரிபாகங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் மொத்த வருவாயாக ரூ.796.91 கோடி ஈட்டியுள்ளது. 2022 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.660.22 கோடி ஈட்டியிருந்தது. 2023 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.123.85 கோடி ஈட்டியுள்ளது. தற்போது இப்பங்கின் விலை ரூ.561.50ஆக உள்ளது.
5. 5 ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் (Five-Star Business Finance):வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான பைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ், கடந்த செப்டம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.522.37 கோடியும், நிகர லாபமாக ரூ.199.39 கோடியும் ஈட்டியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, இந்நிறுவன பங்கின் விலை ரூ.733.80ஆக இருந்தது.
6. எம்.டி.ஏ.ஆர். டெக்னாலஜிஸ் (MTAR Technologies):என்ஜினீயரிங், உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனமான எம்.டி.ஏ.ஆர். டெக்னாலஜிஸ், கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர வருவாயாக ரூ.166.84 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 32.22 சதவீதம் அதிகமாகும். நிகர லாபமாக ரூ.20.46 கோடி ஈட்டியுள்ளது. இப்பங்கின் விலை தற்போது ரூ.2,244.75ஆக உள்ளது.
7. சொனாட்டா சாப்ட்வேர் (Sonata Software):மிட் கேப் ஐ.டி. சாப்ட்வேர் நிறுவனமான சொனாட்டா சாப்ட்வேர் கடந்த செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.124.2 கோடியும், மொத்த வருவாயாக ரூ.1,912.6 கோடியும் ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் முறையே 10 மற்றும் 28 சதவீதம் அதிகமாகும். மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.1,367.90ஆக இருந்தது.
8. கிரெடிட் அக்சஸ் கிராமீன் (CreditAccess Grameen): வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனம் மற்றும் குறு நிதி நிறுவனமான கிரெடிட் அக்சஸ் கிராமீன் 2023 செப்டம்பர் காலாண்டில் மொத்த வருவாயாக ரூ.1,248 கோடி ஈட்டியுள்ளது. இது . சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 53 சதவீதம் வளர்ச்சியாகும். கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 98 சதவீத் அதிகரித்து ரூ.347 கோடியாக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.1,693.15ஆக உள்ளது.
9. கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ் இந்தியா (Kaynes Technology):இந்நிறுவனம் ஒரு மின்னணு ஒப்பந்த உற்பத்தி நிறுவனமாகும். கடந்த செப்டம்பர் காலாண்டில் கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 12 சதவீதம் அதிகரித்து ரூ.32 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் 32 சதவீதம் அதிகரித்து ரூ.361 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவன பங்கின் விலை ரூ.2,436.15ஆக உள்ளது.
10. நசரா டெக்னாலஜிஸ் (Nazara Technologies): டிஜிட்டல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமான நசரா டெக்னாலஜிஸ் 2023 செப்டம்பர் காலாண்டில் நிகர வருவாயாக ரூ.6.88 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 செப்டம்பர் காலாண்டில் ரூ.6.30 கோடியாக இருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.55 லட்சம் லாபமாக ஈட்டியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் தற்போது இப்பங்கின் விலை ரூ.794.85ஆக உள்ளது.
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications