கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்.. வரும் வாரத்தில் சந்தையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்..!

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இது வாரத் தொடக்கத்தில் சரிவில் காணப்பட்டாலும், வார இறுதியில் ஏற்றத்தில் முடிவடைந்தது.

இது நடப்பு வாரத்தில் சென்செக்ஸ்-ன் முக்கிய விகிதமானது 60,000 புள்ளிகளை கடந்துள்ளது. இதற்கிடையில் சென்செக்ஸ் 619.07 புள்ளிகள் அல்லது 60,686.69 புள்ளிகளாக முடிவடைந்தது. இதற்கிடையில் நிஃப்டி 185.95 புள்ளிகளாக ஏற்றம் கண்டு, 18,102.75 புள்ளிகளாகவும் முடிவடைந்தது.

குறிப்பாக இன்ஃப்ரா, எனர்ஜி, ஐடி மற்றும் ஆட்டோ பங்குகள் சந்தையில் ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் வங்கி பங்குகள் மற்றும் பார்மா பங்குகள் சரிவினைக் கண்ட நிலையில், அதிக ஏற்றம் தடுக்கப்பட்டது.

பங்குச்சந்தையில் பட்டியல்

பங்குச்சந்தையில் பட்டியல்

பாலிசி பஜார் மற்றும் பைசபஜார் தளங்களை ஒருங்கிணைக்கும் பிபி ஃபின்டெக், நாளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல சிகாச்சி எண்டர்பிரைசஸ் மற்றும் எஸ்ஜேஎஸ் என்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்களும், நவம்பர் 15 அன்று பங்குச்சந்தையில் பட்டியலிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்போல இந்தியாவின் மிகப்பெரிய பேமெண்ட் நிறுவனமான பேடிஎம் நவம்பர் 18 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய சந்தை வரலாற்றில் மிகப்பெரிய அளவில் நிதியின் மூலம் திரட்டிய மிகப்பெரிய நிறுவனமாகும்.

ஐபிஓ நிலவரம்

ஐபிஓ நிலவரம்

வரும் வாரத்தில் இரண்டு நிறுவனங்கள் தங்களது பங்குகளை பங்குச் சந்தையில் வெளியிட உள்ளன. ஒன்று லைஃப் சயின்ஸ் கம்பெனி. நவம்பர் 15 அன்று தனது பங்குகளை வெளியிட உள்ளது. நவம்பர் 17 அன்று இந்த பங்கு வெளியீடானது முடிவடைய உள்ளது. இதன் விலை நிர்ணயம் 635 - 662 ரூபாயாக உள்ளது.

கோ ஃபேஷன் நிறுவனமும் நவம்பர் 17 அன்று பங்குகளை வெளியிட உள்ளது, நவம்பர் 22 அன்று இந்த பங்குகளை வெளியீடும் முடிவடைய உள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் விலை விகிதமானது 655 - 690 ரூபாய் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் இவ்விரு நிறுவனங்களும் முறையே 1,023.5 கோடி ரூபாய் மற்றும் 1,013.6 கோடி ரூபாய் நிதியை திரட்ட உள்ளன.

அன்னிய முதலீடுகள் நிலவரம்

அன்னிய முதலீடுகள் நிலவரம்

இந்த வாரத்தில் அன்னிய முதலீட்டு விகிதமானது 4,901.76 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று விட்டு வெளியேறியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீடுகள் 5,393.52 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளனர். வரும் வாரத்திலும் அந்நிய முதலீடுகளின் விகிதமானது தொடர்ந்து முதலீட்டாளார்கள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். இது சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திரம் வாங்குதல் குறைப்பு

பத்திரம் வாங்குதல் குறைப்பு

அமெரிக்காவின் மத்திய வங்கி பத்திரம் வாங்குதலை நடப்பு மாதத்தில் இருந்து படிப்படியாக குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விரைவில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினையும் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு பணவீக்கம் பற்றிய கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க டாலர்

அமெரிக்க டாலர்

வரவிருக்கும் நாட்களில் அமெரிக்க டாலரின் மதிப்பானது முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படலாம். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க டாலரின் மதிப்பானது 95.11 டாலர்களாக முடிவுற்றது. இது முந்தைய வாரத்தில் 94.31 டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கிட்டத்தட்ட 1.1% நடப்பு மாதத்தில் இதுவரையில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது...

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

கடந்த அமர்வில் அமெரிக்க பத்திர சந்தையும் வெள்ளிக்கிழமையன்று 1.57% ஏற்றத்தில் தான் முடிவடைந்தது. இது முந்தைய வாரத்தில் 1.45 சதவீதம் ஏற்றத்தில் இருந்தது. ஆக இதுவும் வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய காரணியாக இருக்கலாம்.

இதற்கிடையில் இந்திய ரூபாயின் மதிப்பானது நடப்பு வாரத்தில் 74 - 74.50 ரூபாயாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தாக்கம்

கொரோனா தாக்கம்

சர்வதேச நாடுகளில் பல பகுதிகளிலும் தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சீனாவின் முக்கிய பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இது மேற்கொண்ட நீண்ட கால நோக்கில் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவின் சில நாடுகளிலும் தாக்கம் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனாவின் தாக்கம் என்பது குறைய தொடங்கியிருந்தாலும், தடுப்பூசி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

டெக்னிக்கல் பேட்டன் எப்படியுள்ளது?

டெக்னிக்கல் பேட்டன் எப்படியுள்ளது?

தினசரி கேண்டில் பேட்டர்னில் நிஃப்டி மேற்கொண்டு அதிகரிக்கும் விதமாக பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இதற்கிடையில் நிஃப்டி நடப்பு வாரத்தில் 18,100-க்கும் மேலாக முடிவடைந்துள்ளது. ஆக வரவிருக்கும் வாரத்திலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இலக்கு 18,200 - 18,400 ஆக உள்ளது. குறையும் பட்சத்தில் 17,850 - 17,650 என்ற நிலையே இருந்து வருகின்றது.

கவனிக்க வேண்டிய காரணிகள்

கவனிக்க வேண்டிய காரணிகள்

இந்தியாவின் பணவீக்கம் குறித்தான தரவு (WPI), வர்த்தகம் குறித்தான தரவு (Trade Balance) உள்ளிட்டவை திங்கட்கிழமையன்று வெளியாகவுள்ளன.

டெபாசிட் & வங்கி கடன் வளர்ச்சி, அன்னிய பண பரிமாற்றம், அன்னிய இருப்பு உள்ளிட்டவை வெளியாகவுள்ளன.
அமெரிக்காவின் சில்லறை விற்பனை, தொழில் துறை உற்பத்தி குறித்தான தரவுகள், வேலையின்மை, வேலையில்லாதோர் நலன் குறித்த தரவுகள், ஐரோபாவின் மூன்றாவது காலாண்டு ஜிடிபி மதிப்பீடு, தொழிற்துறை உற்பத்தி, பணவீக்கம் உள்ளிட்ட தரவுகள் வெளியாகவுள்ளன.
ஜப்பானின் மூன்றாவது காலாண்டு ஜிடிபி கணிப்பு, பணவீக்கம், மெஷினரி ஆர்டர்கள், சீனாவின் தொழில் துறை உற்பத்தி குறித்தான குறியீடுகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+