இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்று டாடா குழுமம். இது முன்னணி வணிக குழுமம் என்பதோடு, வாடிக்கையாளர்களின் நம்பகமான பிராண்டாகவும் இருந்து வருகின்றது. உணவுக்கு பயன்படுத்தும் உப்பு முதல் விலையுயர்ந்த நகைகள், கார்கள் வரையில் வெற்றிகரமாக கோலோச்சி வரும் டாடா, தனக்கென ஒரு தனிப்பாதையில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டுள்ளது.
இப்படி உள்ள ஒரு டாடா குழும பங்குகளை யாருக்குத் தான் பிடிக்காது. டாடாவின் வணிகம் மட்டும், டாடா குழும பங்குகளும் வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் பெரும் திருப்தி படுத்தியுள்ளது எனலாம்.
11 பங்குகள் 100% மேல் ஏற்றம்
சொல்லப் போனால் டாடா குழும பங்குகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வரப்படும் பங்குகளாகவும் உள்ளன. டாடா குழுமத்தில் உள்ள 29 பங்குகளில் 11 பங்குகள் நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 100% மேலாக லாபம் கொடுத்துள்ளன.
ராலிஸ் இந்தியாவினை தவிர மற்ற அனைத்து பங்குகளும் நல்ல லாபத்தினையே பதிவு செய்துள்ளன.
சென்செக்ஸ்-ஐ விட 24 பங்குகள் பெட்டர்
இதே 6 பங்குகள் 50 - 70% லாபத்திலும் உள்ளன. இதில் இன்னும் கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், டாடா குழுமத்தினை சேர்ந்த 24 பங்குகள், சென்செக்ஸ்-ஐ விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டில் 16% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தககது.
மல்டிபேக்கர் பங்குகள்
மேலும் நடப்பு நிதியாண்டில் டாடா குழுமத்தில் 11 பங்குகள் மல்டிபேக்கர் பங்குகளாக உள்ளன. இதே 2021ம் நிதியாண்டில் சுமார் 17 பங்குகள் 100% மேலாக லாபம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தொடர்ந்து கடந்த இரண்டு நிதியாண்டுகளாகவே 6 பங்குகள் 100% மேலாக லாபம் கொடுத்து வருகின்றன.
ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்ஸ் & அசெம்பிளிங் லிமிடெட்
ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்ஸ் & அசெம்பிளிங் லிமிடெட் பங்கு விலையானது, நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 1279% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த மார்ச் 31,2021ல் 33.4 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது மார்ச் 24, 2022 அன்று 460.55 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 731 கோடி ரூபாயாக இருக்கும்.
டாடா டெலிசர்வீசஸ்
டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) லிமிடெட் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 1033% அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச் 31, 2021ல் 14.1 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது மார்ச் 24, 2022ல் 159.75 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பானது 31, 230 ரூபாயாகும்.
நெல்கோ லிமிடெட்
நெல்கோ லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 260% ஏற்றத்தில் உள்ளது. இந்த பங்கின் விலையானது மார்ச் 31, 2021ல் 188.6 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் 24,2022 அன்று 678.6 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் தற்போதைய சந்தை மூலதனம் 1548 கோடி ரூபாயாகும்.
தயோ ரோல்ஸ்
தயோ ரோல்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது நடப்பு நிதியாண்டில் 240% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த மார்ச் 31, 2021ல் 38 ரூபாயில் இருந்து, மார்ச் 34, 2022ல் 129.3 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 133 கோடி ரூபாயாகும்.
டாடா எல்க்ஸி (Tata Elxsi Ltd)
டாடா எல்க்ஸி நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 182% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த மார்ச் 24, 2022 அன்று 7603.55 ரூபாயாக ஏற்றம் கண்டிருந்தது. இது கடந்த மார்ச் 31, 2021 அன்று 2693.4 ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 47,352 கோடி ரூபாயாகும்.
ஓரியண்டல் ஹோட்டல்ஸ்
டாடாவின் ஓரியண்டல் ஹோட்டல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது நடப்பு நிதியாண்டில் 163% ஏற்றம் கண்டுள்ளது. இந்த பங்கின் விலையானது மார்ச் 31, 2021 அன்று 22.75 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச், 24, 2022 அன்று 59.75 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 1067 கோடி ரூபாயாகும்.
ஆட்டோமொபைல் கார்ப்பரேஷன்
ஆட்டோமொபைல் கார்ப்பரேஷன் ஆஃப் கோவா லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது, நடப்பு நிதியாண்டில் 143% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த மார்ச் 31, 2021 அன்று 406.9 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச், 24, 2022 அன்று 989.25 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 602 கோடி ரூபாயாகும்.
டின்பிளேட் நிறுவனம்
டின்பிளேட் நிறுவனத்தின் (Tinplate Company Of India Ltd.) பங்கு விலையானது நடப்பு நிதியாண்டில் 141% அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச் 31, 2021 அன்று 160.5 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச், 24, 2022 அன்று 387.25 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 4053 கோடி ரூபாயாகும்.
தேஜாஸ் நெட்வொர்க் லிமிடெட்
தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்கு விலையானது நடப்பு நிதியாண்டில் 140% அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச் 31, 2021 அன்று 159.25 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச், 24, 2022 அன்று 382.15 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 4378 கோடி ரூபாயாகும்.
ஆர்ட்சன் இன்ஜினியரிங்
ஆர்ட்சன் இன்ஜினியரிங் (Artson Engineering Ltd) நிறுவனத்தின் பங்கு விலையானது நடப்பு நிதியாண்டில் 136% அதிகரித்துள்ளது. இதன் பங்கு விலையானது மார்ச் 31, 2021 அன்று 39.35 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் 24, 2022 அன்று 92.75 ரூபாயாக இருந்தது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 342 கோடி ரூபாயாகும்.
டாடா பவர்
டாடா பவர் கம்பெனி லிமிடெட் (Tata Power Company Ltd) நிறுவனத்தின் பங்கு விலையானது விலையானது, நடப்பு நிதியாண்டில் 132% அதிகரித்துள்ளது. இதன் பங்கு விலையானது மார்ச் 31, 2021 அன்று 103.2 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் 24, 2022 அன்று 239.55 ரூபாயாக இருந்தது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 76,544 கோடி ரூபாயாகும்.
தி இண்டியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட்
தி இண்டியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (The Indian Hotels Company Ltd) நிறுவனத்தின் பங்கு விலையானது, நடப்பு நிதியாண்டில் 104% அதிகரித்து, மார்ச் 24, 2022 அன்று 219.1 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே மார்ச் 31, 2021 நிலவரப்படி 107.51 ரூபாயாகைருந்தது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 28952 கோடி ரூபாயாக உள்ளது.
100% மேல் தொடர் லாபம்
ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்ஸ் & அசெம்பிளிங் லிமுடெட் - FY2021 -153% - FY 2022- 1279%
டாடா டெலிசர்வீசஸ் - FY2021 -683% - FY 2022- 1033%
டாடா எல்க்ஸி (Tata Elxsi Ltd) - FY2021 -328% - FY 2022- 182%
டின்பிளேட் நிறுவனத்தின் (Tinplate Company Of India Ltd.) - FY2021 -115% - FY 2022- 141%
தேஜாஸ் நெட்வொர்க் லிமிடெட் - FY2021 -401% - FY 2022- 140%
டாடா பவர் கம்பெனி லிமிடெட் - FY2021 - 214% - FY 2022- 132%
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?



Click it and Unblock the Notifications