5 வருடத்தில் 3,000 சதவீத லாபம்.. முதலீட்டாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

இந்திய பங்குச்சந்தையில் பல ஆயிரம் நிறுவனங்கள் உள்ளது, எந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம்..? எதில் ஆதிக லாபம் கிடைக்கும்..? என்பதை புரிந்துகொள்வதற்கே சிலருக்கு வருடங்கள் தேவைப்படும்.

ஆனால் இங்கு யாருக்கும் தெரியாத சில நிறுவனங்கள் வெறும் 5 வருடங்களில் சுமார் 3,000 சதவீதம் அதிக லாபத்தை அளித்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் அதுதான் உண்மை.

இப்படிப்பட்ட சில நிறுவனங்கள் உங்களின் பார்வைக்கு.

ஸ்டைலாம் இண்டஸ்ட்ரீஸ்

ஸ்டைலாம் இண்டஸ்ட்ரீஸ்

லேமினேட்ஸ் வர்த்தகத்தில் இருக்கும் ஸ்டைலாம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் 2013ஆம் ஆண்டில் வெறும் 22.95 ரூபாய்க்கு வர்த்தக செய்யப்பட்ட நிலையில் 2018 பிப்ரவரி 22இல் இதன் மதிப்பு 697.70 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது

இது கிட்டத்தட்ட 2,927 சதவீத வளர்ச்சி, இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாப அளவுகள் 2.82 கோடி ரூபாயில் இருந்து 18.35 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

 

 சமன்லால் சீடியா

சமன்லால் சீடியா

5 வருடத்திற்கு முன்னால் சமன்லால் சீடியா நிறுவனப் பங்குகள் வெறும் 5.82 ரூபாய் விலையில் இருந்தது, இன்று இதன் மதிப்பு 152.55 ரூபாய் வரையில் வளர்ச்சி அடைந்து சுமார் 2,521 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

 1,000 சதவீத வளர்ச்சி

1,000 சதவீத வளர்ச்சி

கடந்த 5 வருடத்தில் என்ஜிஎல் பைன் கெமிக்கல்ஸ் (2,213 சதவீதம்), சிஎஸ்எல் பைனான்ஸ் (1,988 சதவீதம்), மல்டிபேஸ் இந்தியா (1,381 சதவீதம்), பெயிடு லீசிங் (1,153 சதவீதம்) மற்றும் விபுல் ஆர்கானிக்ஸ் (1,119 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் 1000 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்த நிறுவனங்களின் லாப அளவுகள் இக்காலகட்டத்தில் சுமார் 200 முதல் 1,250 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

 

500-900 சதவீதம் வளர்ச்சி

500-900 சதவீதம் வளர்ச்சி

சில்லார் டெக், கோரல் லேப்ஸ், பிரஷ்டிராப் ப்ரூட்ஸ், ஜென்புர்கட் பார்மா, ஏரெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வின்யோபிலெக்ஸ் மற்றும் டாய்காபில் கெமிகல்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடந்த 5 வருடத்தில் 500-900 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

 125-400 சதவீத வளர்ச்சி

125-400 சதவீத வளர்ச்சி

இப்பிரிவில் அஜந்தா சோயா, அக்னிட் இண்டஸ்ட்ரீஸ், கேரளா ஆயுர்வேதா ஆகிய நிறுவனங்கள் 125-400 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+