நிஃப்டி வர்த்தக நேர முடிவில் 259 புள்ளிகள் சரிந்து 10599-க்கு சந்தை நிறைவடைந்தது. நிஃப்டியில் 11 பங்குகள் ஏற்றத்திலும், 39 பங்குகள் இறக்கத்திலும் நிறைவடைந்தன. சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 806 புள்ளிகள் சரிந்து 35169-க்கு வர்த்தகம் முடிந்தது.
டாலர்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.60-ல் வர்த்தகமாகி வருகிறது. இன்னும் இன்றைய டாலர் வர்த்தகம் மாலை ஐந்து மணீக்கு முடிவடையும் போது மீண்டும் புதிய இறக்கத்தில் கரன்ஸி சந்தை நிறைவடைந்து விடுமோ என்று கரன்ஸி வர்த்தகர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
செய்திகள்
கச்சா எண்ணெய், டாலர் போன்ற உலக பிரச்னைகளைத் தாண்டி இன்று சந்தையில் உண்மையாகவே நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை விவரங்கள் வெளியானதும் டாடா மோட்டார்ஸ் சரிவு, ஐசிஐசிஐ தலைவர் சந்தா கோச்சர் பதவி விலகல் என்று தொடர்கிறது.
முடியும் தருவாய்
முக்கியமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இறக்கம், அதனைத் தொடர்ந்து விமான போக்குவரத்து நிறுவன பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. அதே நேரத்தில் எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விலை சரியத் தொடங்கியது. எப்படியோ இந்த செய்தி காலையில் வராமல் மாலை 3 மணியளவில் தான் செய்தி வெளியானது. எனவே இந்த வரிக் குறைப்பின் முழுமையான முதலீட்டாளர் மனநிலையை பிரதிபலிக்க போதுமான நேரம் இல்லாமல் போய்விட்டது.
நிலவரம் கலவரம்
இத்தனை களேபரங்கள் ஒன்றாக சேர மொத்த சந்தையும் நிதானம் அடையாமல், ரத்தக் களரி யாகி இருக்கிறது. இத்தனை அதிரடிகளைத் தாங்கிய சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு 2.5 லட்சம் கோடி நஷ்டத்தை தான் கவனிக்கும் விதமாக கொடுத்தது.
லாபம்
இன்று சந்தையில் நல்ல லாபம் பார்த்த பங்குகள் என்றால் ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் , அல்ட்ராடெக் சிமென்ட், பாரதி ஏர்டெல், லார்சன் அண்ட் டியூப்ரோ போன்ற பங்குகள் ஓரளவுக்கு நல்ல லாபம் பார்த்தன.
நஷ்டம்
பெட்ரோல், டீசல் விலை குறைவு அறிவிப்புக்கு பிறகு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனப் பங்குகள், வொடாஃபோன் ஐடியா, ரிலையன்ஸ், ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் 6.5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை விலை இறங்கி வர்த்தகமாயின.
செக்டோரியல் இண்டெக்ஸ்
நிஃப்டியின் அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. சென்செக்ஸ் இண்டெக்ஸ்களுக்கும் இதே நிலை தான். எனவே யாரும், எந்த துறை சார்ந்தவர்களும் இந்த சரிவில் இருந்து தப்பிக்கவில்லை என்பதையே இந்த செக்டோரியல் இண்டெக்ஸ்கள் சொல்கின்றன.
உலக சந்தைகள்
லண்டன், ஐரோப்பா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங், தைய்வான், கொரியா என்று அனைத்து சந்தைகளிலும் சந்தேகமே இல்லாமல் 0.45 சதவிகிதம் முதல் 2.6 சதவிகிதம் வரை இறக்கத்தில் வர்த்தகமாயின.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications