பங்குச் சந்தையில் ஒரு நேரத்தில் தாறுமாறாக ஏற்றம் கண்டு அதிக விலைக்கு விற்கப்பட்ட பல ஸ்மால்கேப் பங்குகள் தற்போது ஏறி வேகத்தில் இறங்கி வருகின்றன. கடந்த அக்டோபரில் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்ய தொடங்கியதையடுத்து, ஸ்மால்கேப் பங்குகள் சரிவு காண தொடங்கின. அடுத்ததாக அந்நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது, பங்குகள் விலை அதிக மதிப்பு, அமெரிக்காவின் வர்த்தக போர் உள்ளிட்ட சர்வதேச சூழல்கள் சாதகமாக இல்லாதது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ய தொடங்கினர். குறிப்பாக அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் தீவிரமாக பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் பங்குச் சந்தையில் ஒரு காலத்தில் ஆசை ஆசையாய் வாங்கி போட்ட பங்குகளை முதலீட்டாளர்கள் தற்போது வேகவேகமாக விற்பனை செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக கடந்த மாதத்தில் நிப்டி ஸ்மால்கேப் 250 குறியீட்டில் 22 பங்குகள் 20 முதல் 43 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளன. நியூஜென் சாப்ட்வேர் நிறுவன பங்கின் விலை அதிகபட்சமாக 43.40 சதவீதம் சரிந்தது. நியூஜென் சாப்ட்வேர் நிறுவன பங்கின் விலை ரூ.1,626லிருந்து ரூ.1,020ஆக குறைந்துள்ளது. இவ்வளவுக்கும் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 2023ல் 333 சதவீதமும், 2024ல் 118 சதவீதமும் ஆதாயம் கொடுத்துள்ளது. ஆனால் இந்த ஆண்டில் இதுவரை இப்பங்கு விலை 40 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது.

அடுத்ததாக, நெட்வெப் டெக்னாலஜி மற்றும் சொனாட்டா சாப்ட்வேர் ஆகிய ஸ்மால்கேப் ஐடி பங்குகளும் கடும் சரிவை சந்தித்தன. கடந்த மாதத்தில் நெட்வெப் டெக்னாலஜி நிறுவன பங்கின் விலை 36 சதவீதமும், சொனாட்டா சாப்ட்வேர் நிறுவன பங்கின் விலை 23 சதவீதமும் வீழ்ச்சி கண்டது. கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவன பங்கின் விலை கடந்த மாதம் 39 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் காலாண்டு வருவாய் மதிப்பீடுகளை காட்டிலும் குறைவாக இருந்ததால், இந்நிறுவன பங்கு பலத்த அடி வாங்கியது. மல்டிபேக்கர் நிறுவனமான அபார் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள் அதிருப்தி அளிப்பதாக இருந்தால், பங்கு விலை கடுமையாக சரிந்தது. ஒரே மாதத்தில் அபார் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 37 சதவீதம் குறைந்தது. 2021 முதல் 2024 வரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 2,900 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூபிடர் வேகன்ஸ், ராமகிருஷ்ணா போர்ஜிங்ஸ், திதாகார் ரயில் சிஸ்டம்ஸ் ஆகிய ரயில்வே தொடர்பான பங்குகள் 36 சதவீதம் வரை சரிந்தன. பிஇஎம்எல், திரிவேணி டர்பைன் மற்றும் எலெகான் இன்ஜினீயரிங் போன்ற கேப்பிடல் குட்ஸ் துறையை சேர்ந்த பங்குகளின் விலையும் கணிசமான அளவில் குறைந்தது. ஸ்டெர்லிங் அண்ட் வில்சன், மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ், இந்தியா சிமெண்ட்ஸ், டெக்னோ எலக்ட்ரிக் அண்ட் இன்ஜினீயரிங், ஸ்வான் எனர்ஜி, பிரஜ் இண்டஸ்ட்ரீஸ், வேதாந்த் பேஷன்ஸ்,சிடிஎஸ்எல்,என்சிசி,டேட்டா பேட்டர்ன்ஸ் இந்தியா மற்றும் வெல்ஸ்பன் லிவிங் ஆகிய பங்குகளின் விலையும் சரிந்தது. இந்த 22 பங்குகளும் கடந்த ஆண்டுளில் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications