சென்னை: அந்நிய செலாவணிகளை மாற்றி தரும் சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு 6 மாதங்களில் 240% லாபத்தை பெற்று தந்துள்ளது.
பிரித்வி எக்ஸ்சேஞ்ச்(இந்தியா) லிமிடெட் நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது, அந்நிய செலாவணிகளை ரூபாயிலும், ரூபாயை அந்நிய செலாவணிகளாகவும் மாற்றி தரும் இந்த நிறுவனம் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் முக்கியமான நகரங்களில் கிளைகளை நிறுவியுள்ளது. வெளிநாடு செல்லும் மாணவர்கள், வணிகர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு இந்நிறுவனம் அந்நிய செலாவணிகளை மாற்றி தருகிறது.
பிரித்வி எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஆறு மாதங்களில் 240% லாபத்தை அள்ளித் தந்துள்ளது. இதனிடையே இந்நிறுவனம் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் முதலீட்டாளர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட்டாக ஒரு பங்கிற்கு 2 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஒரு நிறுவனம் தங்களது வருவாய் மற்றும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை முதலீட்டாளர்களுக்கு பணமாகவோ அல்லது பங்குகளாகவோ பிரித்து வழங்கும் இதுதான் டிவிடெண்ட் என அழைக்கப்படுகிறது. மார்ச் 28ஆம் தேதி அன்று ஒரு பங்குக்கு இரண்டு ரூபாய் என்ற அளவில் டிவிடெண்ட் வழங்கப்படும் என்றும், எ மார்ச் 20ஆம் தேதி நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மார்ச் 22ஆம் தேதி வெள்ளியன்று மும்பை பங்குச்சந்தையில் இதன் ஒரு பங்கின் மதிப்பு 242.90 என்ற 52 வார கால உச்சத்தை எட்டியது.கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்குகள் 10 சதவிகித லாபத்தை தந்துள்ளன.
6 மாதக் காலத்தில் இந்த பங்கின் மதிப்பு 240% உயர்வு கண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 200 கோடி ரூபாயாக உள்ளது. இதன் ஆர்ஓஇ 19.37 % ஆக உள்ளது. இந்த நிறுவனத்தின் புக் வேல்யூ ஒகு பங்கிற்கு 33.32 என்ற அளவில் உள்ளது முக மதிப்பு 10 என்ற அளவில் உள்ளது.
இந்த நிறுவனத்தின் வருவாய் என்று பார்த்தால் 2022 ஆம் ஆண்டில் 1519 கோடி ரூபாயாக இருந்து 2023ஆம் ஆண்டில் 3,053 கோடி ரூபாய் என உயர்வு கண்டுள்ளது. நிறுவனத்தின் லாபம் ஐந்து கோடி என்ற அளவில் இருக்கிறது. நிறுவனத்தின் பங்குகளில் 71.95% புரமோட்டர்களிடமும், 28.05% சில்லறை முதலீட்டாளர்கள் வசமும் உள்ளது.
சென்னையில் தலைமை இடமாகக் கொண்ட பிரித்வி எக்சேஞ்ச் லிமிடெட் நிறுவனம் கடந்த 27 ஆண்டுகளாக வெளிநாட்டு செலாவணிகளை மாற்றி தரும் தொழிலை மேற்கொண்டுள்ளது.
Story written by: devika


Click it and Unblock the Notifications