இந்தியப் பங்குச்சந்தை தினமும் சரிந்து வரும் வேளையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதீத பணப்புழக்கம், எளிதாக முதலீட்டை வெளியேற்றும் முறையால் பன்னாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக முதலீட்டை வெளியேற்றுவதாக கூறியது இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் கலவையான கருத்தை உருவாக்கிய நிலையில் இன்றும் சரிவைச் சந்தித்துள்ளது.
சென்செக்ஸ் குறியீடு 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 86,159 புள்ளிகளில் வர்த்தகமான நிலையில் இன்று 460 புள்ளிகள் சரிவுடன் 73,249.39 புள்ளிகளை எட்டி வர்த்தகம் முடிந்துள்ளது.

இன்று ஒரு நாள் வர்த்தக சரிவின் மூலம் மட்டுமே மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மதிப்பு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சரிவைச் சந்தித்து மொத்த சந்தை மதிப்பு 458 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. நிஃப்டி 50 குறியீடு 124 புள்ளிகள் சரிந்து 22,688 புள்ளிகளை எட்டியுள்ளது.
இன்றைய சரிவுக்கு அடிப்படை காரணமாக இருந்தது கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்த அமெரிக்கா - ஈரான் திட்டமிட்டு வரும் வேளையில் கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாகப் பாதிக்கும் என கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக இன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் உயர்ந்து 111 டாலரைத் தொட்டு உள்ளது. மேலும் இன்று ஹவுதி நடத்திய ட்ரோன் தாக்குதலில் சவுதி ஆராம்கோ-வின் எண்ணெய் வயல்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதனால் அமெரிக்க அரசு சவுதியில் இருக்கும் தூதரக அதிகாரிகளைச் சவுதி அரேபியாவை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது மூலம் பதற்றம் அதிகமாகியுள்ளது உறுப்பிடுத்தப்பட்டு உள்ளது.
மேலும் அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் ஆர்காச்சி தெரிவித்தார். இதோடு ஈரானின் அண்டை நாடுகளான ஈராக், பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதிகளை மொத்தமாக முடியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை தாண்டி சர்வதேச சந்தை சூழ்நிலை காரணமாகவும் இன்றும் மும்பை பங்குச்சந்தை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. சீன பங்குச்சந்தை அதன் ஜூன் மாத உச்சத்தில் இருந்து சுமார் 20 சதவீதம் சரிந்து கரடி ஆட்கொண்டு உள்ளது.
மேலும் தென் கொரியாவின் காஸ்பி, ஹாங்காங் நாட்டின் ஹாங்செங் தலா 3 சதவீதமும், ஜப்பான் நிக்கி 2 சதவீதமும் சரிந்துள்ளது.
இதோடு வழக்கமாகப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களுடைய முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். புதன்கிழமை வர்த்தகத்தில் மட்டும் 1,022 மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது மூலம் இன்று சென்செக்ஸ், நிஃப்டி 0.6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications

