தனிப்பட்ட பங்குகள் சார்ந்த செய்திகள் மற்றும் விலை மொமண்டத்தால் சந்தை ஓரளவுக்கு ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் 3.5 சதவிகிதத்துக்கு அதிகமாகி விலை ஏற்றம் கண்டு வர்த்தகமாகி, சென்செக்ஸை உயர்த்திப் பிடித்துக் கொண்டு இருக்கின்றன.
நேற்று மாலை சென்செக்ஸ் 40,359 என்கிற புதிய உச்சத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,439 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,707 என்கிற உச்ச புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, சுமார் 335 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

அதே போல நிஃப்டி நேற்று மாலை 11,914 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 11,922 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 12,018 என்கிற உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட சுமார் 104 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 06 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,237 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 1,223 பங்குகள் ஏற்றத்திலும், 869 பங்குகள் இறக்கத்திலும், 145 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மொத்தம் 2,239 பங்குகளில் 28 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 78 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் மீடியா தவிர அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பொதுத் துறை வங்கிகள், ரியாலிட்டி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
பார்தி ஏர்டெல், பார்தி இன்ஃப்ராடெல், டாடா ஸ்டீல், க்ராசிம், ஹிண்டால்கோ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. யெஸ் பேங்க், ஜி எண்டர்டெயின்மெண்ட், ஓ என் ஜி சி, கெயில், விப்ரோ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.64 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 62.61 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications