2023இல் 35 சதவீத லாபத்தை கொடுத்த 4 துறை குறியீடுகள்..!

2023 இல் இதுவரை, BSE சென்செக்ஸ் டிசம்பர் 30,2022 அன்று 60,841 ஆக இருந்து ஆகஸ்ட் 30, 2023 நிலவரப்படி 7 சதவீதம் உயர்ந்து 65,087 ஆக உள்ளது. இந்த ஆண்டு 20 சதவீதத்துக்கும் அதிகமான (YTD) வருமானத்தை வழங்கிய நான்கு துறை குறியீடுகள் உள்ளன.

இந்த ஆண்டு உலகளவில் பங்குச் சந்தைகள் கடும் ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்தன. இந்த ஏற்றத் தாழ்வுகள் இருந்தபோதிலும் வலுவான உள்ளூர் மேக்ரோ பொருளாதார சூழ்நிலை இந்திய பங்குச்சந்தை குறியீடு மீட்க உதவியதோடு ஈக்குவிட்டி முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தையும் பெற்றுத் தந்தது.

2023இல் 35 சதவீத லாபத்தை கொடுத்த 4 துறை குறியீடுகள்..!

பிஎஸ்இ சென்செக்ஸ் 2023இல் இதுவரை 7 சதவீதம் உயர்ந்து உள்ளது. இருப்பினும் வெவ்வேறு துறை இண்டெக்ஸ்கள் வெவ்வேறு மாதிரியாக வர்த்தகமாகின. சில துறை இண்டெக்ஸ்கள் சென்செக்ஸைக் காட்டிலும் உயர்வாக வர்த்தகமாகி 35 சதவீதம் வரை அதிகரித்தது. ஆனால் சில துறை குறியீடுகள் மிகக் கடுமையாக சரிந்து ஆகஸ்ட் 30ஆம் தேதிவரை பெருத்த நஷ்டத்தை தந்தன.

ACE ஈக்குவிட்டியின் படி நான்கு துறை குறியீடுகள் 20 சதவீதத்துக்கும் மேல் (YTD) உயர்வை பதிவு செய்துள்ளது. பிஎஸ்இ கேபிடல் குட்ஸ் இண்டெக்ஸ் தான் இருப்பதிலேயே சிறப்பான குறியீடு பெஞ்சுமார்க்காக உள்ளது. அது 35 சதவீதம் உயர்ந்து 45,016.4 ஆக 2023 ஆகஸ்ட் 30 ஆம் தேதி இருந்தது. இது 2022 டிசம்பர் 30 ஆம் தேதியில் 33,342.2 ஆக இருந்தது.

இதைத் தொடர்ந்து பிஎஸ்இ ரியாலிட்டி இண்டெக்ஸ் 29 சதவீதம் அதிகரித்து 4438.1 23 சதவீதம் எகிறி 35578.7 ஆக உயர்ந்தது.
பிஎஸ்இ ஹெல்த்கேர் நான்காவது பெரிய லாபம் பெற்றதாக இருக்கிறது.
2022 ஆம் ஆண்டு முடிவில் இருந்த 23033.6 லிருந்து 27871.1 ஆக 21 சதவீதம் உயர்ந்தது.

பிஎஸ்இ பாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ் (FMCG) இண்டெக்ஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது. FMCG செக்டார் பெஞ்சுமார்க் 16 சதவீத வருவாயை இந்தாண்டு முதலீட்டாளர்களுக்கு பெற்றுத் தந்தது. 2023 ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று 18497.5 ஆக வர்த்தகம் ஆனது.

இந்த ஆண்டு மிகவும் குறைந்த வருவாயை தந்தது ஆயில் மற்றும் கேஸ். பிஎஸ்இ ஆயில் அண்டு கேஸ் இண்டெக்ஸ் 8.4 சதவீதம் குறைந்து 20409.1 லிருந்து 18693.3 ஆக ஆனது. இந்த நிலையில் பிஎஸ்இ பவர் இண்டெக்ஸும் அபாய நிலையிலேயே வர்த்தமாகி 0.5 சதவீதம் குறைந்து 4374 ஆக ஆகியது.

டாடா மோட்டார்ஸ் (56 சதவீதம்), ஐடிசி (34 சதவீதம்), டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் (33 சதவீதம்), என்டிபிசி (32 சதவீதம்), மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ (30 சதவீதம்) ஆகியவை 2023ல் டாப் பெர்ஃபார்மன்ஸ் பெரிய கேப் பங்குகளாகும்.

அதேவேளையில் யுபிஎல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை முறையே 16 சதவீதம், 7 சதவீதம் மற்றும் 5 சதவீதம் சரிந்துள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+