முத்து முத்தா 5 மல்டிபேக்கர் பங்குகள்.. மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்..!!

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பொதுவாக நல்ல லாபம் கிடைக்கும் பங்குகளில் முதலீடு செய்வதில் தான் ஆர்வம் காட்டுவார்கள். பல நிறுவன பங்குகளில் முதலீட்டாளர்களுக்கு சிறந்த ஆதாயத்தை கொடுத்து இருக்கும்.

முத்து முத்தா 5 மல்டிபேக்கர் பங்குகள்.. மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்..!!

ஆனால் அனைவரும் அந்த பங்குகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த பத்தாண்டுகளில் நல்ல லாபம் கொடுத்த மல்டிபேக்கர் பங்குகளில் 5 பங்குகளை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் (பாக்ட்)

மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் (Fertilizers and Chemicals Travancore) நிறுவனம் உரங்கள் உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் செய்து வருகிறது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் பாக்ட் நிறுவனத்தின் வருவாய் 39.4 சதவீதமும், நிகர லாபம் 73.5 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.

மேலும் கடந்த நிதியாண்டில் பாக்ட் நிறுவனத்தின் லாப வரம்பு 2 சதவீதம் உயர்ந்துள்ளது. பாக்ட் நிறுவ பங்கு விலை கடந்த பத்தாண்டில் 2,579.10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பாக்ட் நிறுவன பங்கின் விலை ரூ.712.65ஆக இருந்தது.

ஏ.பி.ஏ.ஆர். இண்டஸ்ட்ரீஸ்

பவர் டிரான்மிஷனுக்கான கடத்திகளை தயாரிக்கும் சிறிய வர்த்தகமாக ஆரம்பிக்கப்பட்ட ஏ.பி.ஏ.ஆர். இண்டஸ்ட்ரீஸ் ( APAR Industries ) இன்று இந்தியா மற்றும் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. இன்று பல கோடி டாலர் மதிப்பிலான நிறுவனமாக உயர்ந்துள்ளது.

கடந்த 2022-23ம் நிதியாண்டில் ஏ.பி.ஏ.ஆர். இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் 54 சதவீதமும், நிகர லாபம் 148.4 சதவீதமும் அதிகரித்துள்ளது. நிகர லாப வரம்பு 1.70 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஏ.பி.ஏ.ஆர். இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 5,902.79 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் ஏ.பி.ஏ.ஆர். இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை ரூ.5,307.85ஆக இருந்தது.

ஜிண்டால் ஸ்டெயின்லெஸ்

1970களில் வாளிகளை உற்பத்தி செய்வதற்காக ஒ.பி. ஜிண்டால் தொடங்கிய நிறுவனம் தான் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட். இன்று இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டீல் நிறுவனமாகவும், உலகளவில் டாப் 10 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும் வளர்ந்துள்ளது.

கடந்த 2022-23ம் நிதியாண்டில் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் நிறுவனத்தின் வருவாய் 9 சதவீதமும், நிகர லாபம் 31.3 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் லாப வரம்பு 2.65 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டில் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் பங்கு 1,165.56 சதவீதம் வருமானம் கொடுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் நிறுவன பங்கின் விலை ரூ.468.95ஆக இருந்தது.

சி.ஜி. பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் சொல்யூஷன்ஸ்

நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே தொடங்கப்பட்ட நிறுவனமான சி.ஜி. பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் சொல்யூஷன்ஸ் எலக்ட்ரிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. 2022-23ம் நிதியாண்டில் சி.ஜி. பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் வருவாய் 85 சதவீதமும், நிகர லாபம் 5.5 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் சி.ஜி. பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் சொல்யூஷன்ஸ் நிறுவன பங்கின் விலை 413.89 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று சி.ஜி. பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் சொல்யூஷன்ஸ் நிறுவன பங்கின் விலை ரூ.393.85ஆக இருந்தது.

கே.இ.ஐ. இண்டஸ்ட்ரீஸ்

1968ல் தொடங்கப்பட்ட கே.இ.ஐ. இண்டஸ்ட்ரீஸ் கேபிள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. கே.இ.ஐ. இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தற்போது 1,800க்கும் மேற்பட்ட டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடம் பெரிய வர்ததக கட்டமைப்பை கொண்டுள்ளது.

இந்நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் கே.இ.ஐ. இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் 20.7 சதவீதமும், நிகர லாபம் 30 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. லாப வரம்பு 0.35 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் கே.இ.ஐ. இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை 36,495.86 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் கே.இ.ஐ. இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை ரூ.2,628.80ஆக இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+