நடப்பு 2023-24ம் நிதியாண்டில் பெரும்பாலான வைரம் மற்றும் தங்க ஆபரண நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளன.
குறிப்பாக, ஸ்கை கோல்டு, கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா, தங்கமயில் ஜூவல்லரி, பிசி ஜூவல்லர், திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி ஆகிய நிறுவன பங்குகள் 100 முதல் 300 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. மேலும் இந்த நிறுவன பங்குகள் பலவீனத்தை காட்டிலும் பலத்தையே வெளிப்படுத்துகின்றன. இந்த 5 நிறுவன பங்குகள் ஒரு பார்வை.

ஸ்கை கோல்டு: மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ஸ்கை கோல்டு நிறுவன பங்கின் விலை ரூ.1,156.10ல் முடிவுற்றது. இந்த நிதியாண்டில் இப்பங்கின் விலை 310 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. தற்போது இப்பங்கின் விலை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால மூவிங் சராசரியை காட்டிலும் அதிகமாக உள்ளது.
இந்நிறுவனத்தின் புரோமோட்டர் தனது பங்குகளை வைத்து கடன் வாங்கவில்லை. நிப்டி 500 நிறுவனங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்நிறுவன பங்கு சீராக அதிக வருவாய் அளித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் லாபம் மற்றும் மூலதன செயல்திறன் (RoCE) முன்னேற்றம் கண்டுள்ளது.
கல்யாண் ஜூவல்லர்ஸ்: மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா நிறுவன பங்கின் விலை ரூ.361.65ல் நிலை கொண்டது. இந்த நிதியாண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 250 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் லாபம் மற்றும் மூலதன செயல்திறன் (RoCE) முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 2 காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் வருவாய் தொடர்ந்து அதிகரித்துள்ளது. காலாண்டில் நிகர லாபம் லாப வரம்பு அதிகரிப்புடன் வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்நிறுவன பங்கின் புத்தக மதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் புரோமோட்டர் தனது பங்குகளை வைத்து கடன் வாங்கவில்லை. அன்னிய முதலீட்டாளர்கள் அல்லது நிதி நிறுவனங்கள் இந்நிறுவனத்தில் தங்களது பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ளன.
தங்கமயில் ஜூவல்லரி: மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் தங்கமயில் ஜூவல்லரி நிறுவன பங்கின் விலை ரூ.1,323.75ஆக இருந்தது.இந்த நிதியாண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 168 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. நிப்டி 500 நிறுவனங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்நிறுவன பங்கு சீராக அதிக வருவாய் அளித்து வருகிறது. வலுவான ஆண்டு ஒரு பங்கு வாயிலான வருவாய் வளர்ச்சியை கொண்டுள்ளது.
கடந்த 3 காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து வருகிறது. அன்னிய முதலீட்டாளர்கள் அல்லது நிதி நிறுவனங்கள் இந்நிறுவனத்தில் தங்களது பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக இந்நிறுவன பங்கின் புத்தக மதிப்பு அதிகரித்து வருகிறது.
பிசி ஜூவல்லர்: மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் பிசி ஜூவல்லர் நிறுவன பங்கின் விலை ரூ.54.42ஆக இருந்தது.இந்த நிதியாண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 120 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த 12 மாதங்களில் அதிக தற்போது இப்பங்கின் விலை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால மூவிங் சராசரியை காட்டிலும் அதிகமாக உள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் லாப வரம்பு அதிகரிப்புடன் வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த 2 காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் லாபம் அதிகரித்து வருகிறது.இந்நிறுவனத்தின் புரோமோட்டர் தனது பங்குகளை வைத்து கடன் வாங்கவில்லை. ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி: மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி நிறுவன பங்கின் விலை ரூ.130.10ஆக இருந்தது.இந்த நிதியாண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 119 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
வலுவான ஆண்டு ஒரு பங்கு வாயிலான வருவாய் வளர்ச்சியை கொண்டுள்ளது. இந்நிறுவனம் அதிக டிடிஎம் இபிஎஸ் வளர்ச்சியை கொண்டுள்ளது. முந்தைய ஆண்டின் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் கடந்த காலாண்டில் நிகர லாபம் லாப வரம்பு அதிகரிப்புடன் வளர்ச்சி கண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் புரோமோட்டர் தனது பங்குகளை வைத்து கடன் வாங்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக இந்நிறுவன பங்கின் புத்தக மதிப்பு அதிகரித்து வருகிறது. அன்னிய முதலீட்டாளர்கள் அல்லது நிதி நிறுவனங்கள் இந்நிறுவனத்தில் தங்களது பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ளன.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications