அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விவகாரம், மந்தநிலை குறித்த அச்சம் போன்ற காரணங்களால் இந்த ஆண்டு தொடக்கம் முதலே இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வந்தன. பங்குச் சந்தை நிலவரம் கலவரமாக இருந்தபோதிலும் சில பங்குகள் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் விறுவிறுவென ஏற்றம் கண்டுள்ளன. பல பங்குகள் குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளன. இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் ஆர்ஆர்பி செமிகண்டக்டர், எலைட்கான் இன்டர்நேஷனல் உள்பட 5 பங்குகள் 150 முதல் 270 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
ஆர்ஆர்பி செமிகண்டக்டர்
ஆர்ஆர்பி செமிகண்டக்டர் நிறுவனம் செமிகண்டக்டர் மற்றும் டிஜிட்டல் சிப்களை கையாள்வதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ், தகவல் மற்றும் தொழில்நுட்ப வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. 2025 ஜனவரி 1ம் தேதியன்று இப்பங்கு விலை ரூ.185ஆக இருந்தது. தற்போது இப்பங்கின் விலை ரூ.723ஆக உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் குறைவான காலத்தில் இப்பங்கின் விலை 290 சதவீதம் உயர்ந்துள்ளது.

எலைட்கான் இன்டர்நேஷனல்
எலைட்கான் இன்டர்நேஷனல் நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் புகையிலை சார்ந்த பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 273 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதியன்று இப்பங்கின் விலை ரூ.104 என்ற அளவில் இருந்தது. தற்போது இப்பங்கின் விலை ரூ.387ஆக உள்ளது.
கோலாப் பிளாட்ஃபார்ம்ஸ்
கோலாப் பிளாட்ஃபார்ம்ஸ் கணினி ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் பிராசசிங் ஜாப் ஒர்க் மற்றும் பங்குகள் மற்றும் பத்திரங்கள் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறது. 2025 ஜனவரி 1ம் தேதியன்று ரூ.31 என்ற அளவில் இருந்த இப்பங்கின் விலை தற்போது ரூ.113 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. ஆக கடந்த ஜனவரி முதல் இதுவரையிலான காலத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 267 சதவீதம் பெருக்கியுள்ளது.
பயோ கிரீன் பேப்பர்ஸ்
இந்நிறுவனத்தின் பெயருக்கும் அது செய்யும் வணிகத்துக்கும் சிறிது தொடர்பு இருக்காது. பயோ கிரீன் பேப்பர்ஸ் நிறுவனம் நிதி, விளையாட்டுகள் மற்றும் மெட்டாவர்ஸ் போன்ற சமூகங்களை வெப்3ல் ஒருங்கிணைக்கும் ஒரு சாப்ட்வேர் நிறுவனமாகும். இந்த ஆண்டில் இதுவரை இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 238 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. தற்போது இப்பங்கின் விலை ரூ.87 என்ற அளவில் உள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதியன்று இப்பங்கின் விலை 25 ரூபாய்தான்.
என்ஏசிஎல் இண்டஸ்ட்ரீஸ்
என்ஏசிஎல் இண்டஸ்ட்ரீஸ் வேளாண் ரசாயனங்கள் துறையை சார்ந்த நிறுவனமாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கும் சேவை செய்கிறது. கடந்த ஜனவரி 1ம் தேதியன்று இப்பங்கின் விலை ரூ.67ஆக இருந்தது. தற்போது இப்பங்கின் விலை ரூ.172ஆக உள்ளது. ஆக, கடந்த ஜனவரி முதல் இதுவரையிலான 4 மாதத்துக்கும் குறைவான காலத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 157 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
சிங்கப்பூர் நிறுவனத்தை வளைத்து போட்ட KFin டெக்னாலஜிஸ்.. 200% லாபம் கொடுத்த மல்டிபேக்கர் பங்கு..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications