கேஃபின் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த முன்னணி நிதிச் சேவை தளமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் அசெட் மேலாளர்கள் மற்றும் பெருநிறுவன வழங்குநர்களுக்கு சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்கி வருகிறது. பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 8 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
கேஃபின் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் சிங்கப்பூரை தளமாக கொண்ட அசென்ட் ஃபண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் 51 சதவீத பங்குகளை 3.47 கோடி அமெரிக்க டாலருக்கு வாங்கவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கேஃபின் டெக்னாலஜிஸ், அசென்ட்டின் பிரத்யேக புரோமோட்டராக மாறும். மீதமுள்ள 49 சதவீத பங்குகள் நிதியாண்டு 28, நிதியாண்டு 29 மற்றும் நிதியாண்டு 30 ஆகியவற்றின் முடிவில் தலா 16.33 சதவீதம் என மூன்ற தவணைகளில் கையகப்படுத்தப்படும் என்று கேஃபின் டெக்னாலஜிஸ் தெரிவித்தது.

அசென்ட் ஃபண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் பங்குகளை கையகப்படுத்தியதாக கேஃபின் டெக்னாலஜிஸ் அறிவித்ததையடுத்து, இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே கேஃபின் டெக்னாலஜிஸ் 8 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.1,145 வரை சென்றது. நேற்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.1,053.60ல் முடிவுற்றது. கேஃபின் டெக்னாலஜிஸ் நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது
2022 டிசம்பர் 29ம் தேதியன்று பங்குச் சந்தையில் கேஃபின் டெக்னாலஜிஸ் பங்குகள் பட்டியலிடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. தற்போது இப்பங்கின் விலை அதன் ஐபிஓ விலையான ரூ.366ஐ காட்டிலும் 200 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. டிரெண்ட்லினி தரவுகளின்படி, கடந்த ஓராண்டில் இப்பங்கின் விலை 84.29 சதவீதம் உயர்துள்ளது.
2024 டிசம்பர் 30ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் கேஃபின் டெக்னாலஜிஸ் பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,640ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டது. தற்போது கேஃபின் டெக்னாலஜிஸ் பங்கு விலை அதன் 52 வார உச்சவிலையை காட்டிலும் சுமார் 33 சதவீதம் குறைவாக உள்ளது.
லட்சுமி ஸ்ரீ இன்வெஸ்ட்மென்ட் அண்ட் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் அன்ஷுல் ஜெயின் கூறுகையில், கேஃபின் டெக்னாலஜிஸ் பங்கு விலை அதன் ஐபிஓவில் குறைந்தபட்சம் ரூ.270.85லிருந்து ரூ.1,641.35ஆக உயர்ந்து, இதுவரை இல்லாத அளவுக்கு 505 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து அற்புதமான ஏற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
Gensol விவகாரம்: வெளிவராத மோசடி நிறுவனங்கள் ஏராளம்.. ஏமாந்துவிடாதீங்க, எச்சரிக்கும் விஜய் கேடியா..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications