பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள எல்லா நிறுவனங்களும் டிவிடெண்ட் வழங்குவதில்லை. குறிப்பிட்ட பங்குகள் மட்டுமே பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்குகின்றன. இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒரு பிரிவினர் டிவிடெண்ட் வழங்கும் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வார்கள். டிவிடெண்டாக வாயிலாக ஒரு வருமானம் கிடைக்கும் என்பதை இதற்கு முக்கிய காரணமாகும். இன்ஃபோசிஸ், டிசிஎஸ்,நால்கோ, காஸ்ட்ரோல் உள்பட பல நிறுவனங்கள் தங்களது பங்குதாரர்களுக்கு வழக்கமாக டிவிடெண்ட் வழங்கி வருகின்றன. அந்த வகையில் டிசிஎஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஆகியவை 2025 ஏப்ரல் மாதத்தில் இடைக்கால டிவிடெண்ட் அல்லது இறுதி டிவிடெண்ட் தொகையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நேற்று பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், 2025 ஏப்ரல் 10ம் தேதியன்று நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட தனிப்பட்ட மற்றும் ஒட்டு மொத்த நிதி முடிவுகளை பரிசீலித்து அங்கீகரிக்கவும், 2024-25ம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகை ஏதேனும் இருந்தால் இயக்குனர்கள் குழு பரிந்துரை செய்யும் என்று தெரிவித்துள்ளது.

நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான எச்சிஎல் டெக்னாலஜிஸ், கடந்த 24ம் தேதியன்று பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், , 2025 ஏப்ரல் 21 மற்றும் 22ம் தேதிகளில் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம், 2025 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்தத நிதியாண்டுக்கான நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை பரிசீலித்து அங்கீகரிக்கவும், 2025-26ம் நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகை செலுத்துதல் ஆகியவற்றை கருத்தில் கொள்வதற்காக நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஏப்ரல் 19ம் தேதியன்று நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம், 2025 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்தத காலாண்டு/நிதியாண்டுக்கான நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட தனிப்பட்ட மற்றும் ஒட்டு மொத்த நிதி முடிவுகளை பரிசீலித்து அங்கீகரிக்கவும், 2024-25ம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகை ஏதேனும் இருந்தால், அதற்கான பதிவு தேதியை நிர்ணயிப்பது உட்பட பரிந்துரை செய்யவும் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி கடந்த 21ம் தேதி பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், 2025 ஏப்ரல் 19ம் தேதியன்று நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம், 2025 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்தத காலாண்டுக்கான நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட (தனிப்பட்ட மற்றும் ஒட்டு மொத்த) நிதி முடிவுகளை பரிசீலித்து அங்கீகரிக்கவும், 2024-25ம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகை ஏதேனும் இருந்தால், அதனை பரிந்துரை செய்யவும் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் எதிர்வரும் ஏப்ரல் 17ம் தேதியன்று நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ள மும்பை பங்குச் சந்தை அமைப்பிடம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த கூட்டத்தில் 2025 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு இறுதி டிவிடெண்ட் ஏதேனும் இருந்தால் இயக்குனர்கள் குழு பரிசீலித்து பரிந்துரைக்கும் என்று இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications