அதிக லாபம் பெற எந்த துறையில்..? எந்த பங்குகள் வாங்கலாம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்குப் பின்பும், அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையிலும் இந்திய சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

 

 தொடர்ந்து சரியும்..

தொடர்ந்து சரியும்..

தற்போது இருக்கும் மந்தமான வர்த்தகச் சூழ்நிலையில் நிஃப்டி குறியீடு 10,000 முதல் 9,900 புள்ளிகள் வரையில் சரியலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே முதலீட்டாளர்கள் ஒரு துறையில் அல்லது ஒரு நிறுவனத்தில் முதலீடும் செய்யும் முன் சந்தை நிலவரத்தை முழுமையாகத் தெரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும்.

LTCG வரி

LTCG வரி

பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 10 சதவீத LTCG வரி இந்திய முதலீட்டாளர்களையும் சந்தையையும் பாதித்தாலும், அடுத்தச் சில மாதங்களில் இதன் பாதிப்புகள் எதுவும் இருக்காது.

காரணம் தற்போது இந்தியாவில் இறுக்கும் பிற முதலீட்டுத் திட்டத்தில் இருக்கும் வரி அளவுகளை விட இந்த 10 சதவீத LTCG வரி குறைவாகவே உள்ளது. ஆக இதனால் பாதிப்பு இருக்காது.

 

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
 

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

அதேபோல் 10 சதவீத LTCG வரியால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

உதாரணமாக அமெரிக்க முதலீட்டாளர் ஒருவர் இந்தியாவில் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். இந்தியாவில் 0% வட்டி இருக்கும் போது அந்த முதலீட்டாளர் அமெரிக்காவில் 30 சதவீத வரி செலுத்த வேண்டும். இதேபோல் தற்போது 10 சதவீத வரி இருக்கும் நிலையில் அவர் அமெரிக்காவில் 20 சதவீத வரி செலுத்தினால் போதும்.

ஆக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எவ்விதமான பாதிப்புமில்லை. ஆனால் வெளிநாட்டு முதலீட்டின் மீது வரி விதிக்காத நாடுகளில் இந்த வரிப் பாதிப்பை உருவாக்கும்.

 

 நீண்ட கால முதலீடு

நீண்ட கால முதலீடு

எப்போதும் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பில் சிறந்த தரமும், சந்தையில் அதற்கு தேவையும் இருந்தால் அதன் பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை அடையும். இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தில் அதிக லாபம் அடைய வேண்டும் என்றால் கண்டிப்பாக நீண்ட கால முதலீட்டைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்தத் துறை..?

எந்தத் துறை..?

தற்போத சந்தையைத் தாக்கும் முக்கியமான காரணிகளைத் தெரிந்துகொண்ட நிலையில் எந்தத் துறையில் முதலீடு செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

இன்றைய சூழ்நிலைக்கு அதிக லாபம் பெற வேண்டும் என்றால் என்பிஎப்சி, எப்எம்ஜிசி, கட்டுமானம், விவசாய உரம் மற்றும் ஸ்டீல் ஆகிய துறையில் முதலீடு செய்யலாம்.

 

எந்தப் பங்குகள்..?

எந்தப் பங்குகள்..?

அதேபோல் அடுத்த 2-3 வருடங்களில் நீங்கள் அதிக லாபம் பெற இன்றைய சூழ்நிலைக்குப் பெல், SAIL, ஜெயின் ஈரிகேஷன், சட்பாவ் இன்ஜினியரிங் மற்றும் சிம்போனி ஆகிய நிறுவனங்கள் சரியான தேர்வாக இருக்கும்.

Disclaimer

Disclaimer

This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 stocks which may give multibagger returns in 2 3 years

5 stocks which may give multibagger returns in 2 3 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X