இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்திருப்பது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் மும்பையில் மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநரான சஞ்சய் மல்கோத்ரா மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது எதிர்பார்த்ததை போலவே ரெப்போ வட்டி விகிதத்தில் 0.50 அடிப்படை புள்ளிகளை குறைப்பதாக அறிவித்தார். அது மட்டும் இல்லாமல் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்த அவர் சில்லறை விலை பணவீக்க விகிதத்தை 3.7 சதவீதமாக குறைத்து அறிவித்தார். இதற்கு முன்பு இந்தியாவில் சில்லறை விலை பணவீக்கம் 4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதனை தற்போது 3.7 சதவீதமாக குறைத்து இருக்கிறது. பல்வேறு பொருட்களின் விலைவாசி குறையும் என்பதையே இந்த கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ரிசர்வ் வங்கி ஆளுநரின் இந்த அறிவிப்புகள் வெளியானதை அடுத்து இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. குறிப்பாக வங்கிகள் சம்பந்தப்பட்ட பேங்க் நிஃப்டி குறியீடு காலை 10 மணி அளவில் 56,515 புள்ளிகள் என உயர்ந்தது (காலை 10.50 மணி நிலவரம்) . எஸ்பிஐ , ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ் , ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட வங்கித்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் 1 முதல் 2 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.
அதேபோல நிப்டி ரியாலிட்டி இன்டக்சை பொறுத்தவரை 10 மணி அளவில் 999 புள்ளிகள் என வர்த்தகமாகியது, பின்னர் 1,016 புள்ளிகள் வரை உயர்ந்தது. இந்தியாவில் விலைவாசி குறையும் என்ற கணிப்பு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி தந்துள்ளது. வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு இருப்பதால் மக்கள் கடன் வாங்கும் போக்கு அதிகரிக்கும் என்பதால் வீடுகள் மற்றும் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்ற ஒரு நம்பிக்கையாலும் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
பிரதான குறியீடுகள் என பார்க்கும் போது தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி காலை 10 மணி அளவில் 24,710 புள்ளிகள் என வர்த்தகமானது பின்னர் 24,947 புள்ளிகள் வரை உயர்ந்தது. அதே போல மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 10 மணி அளவில் 81280 புள்ளிகளில் இருந்தது, பின்னர் 82,020 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகமானது. பொதுதுறை வங்கி குறியீடான பிஎஸ்யூ பேங்க் 0.9 சதவீதமும் , வாகனங்களுக்கான நிஃப்டி ஆட்டோ இண்டெக்ஸ் 1.2 சதவீதமும் உயர்ந்து வர்த்தகமாகின.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications