இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.) இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். இந்நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கி நெடுஞ்சாலை தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்பந்தங்கள் பெற்று பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் இர்கான் உள்ளிட்ட 6 நிறுவனங்களின் பங்குகள் கடந்த ஒராண்டில் 165 சதவீதம் வரையில் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுத்துள்ளன.

இர்கான் இன்டர்நேஷனல்: இந்நிறுவனம் பொறியியல் மற்றும் கட்டுமான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இர்கான் இன்டர்நேஷனல் பங்கின் விலை ரூ.160.95ஆக இருந்தது. கடந்த ஒராண்டில் இப்பங்கின் விலை 165 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜி.பி.டி. இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ்: ஜி.பி.டி. குழுமத்தின் உள்கட்டமைப்பு பிரிவு ஜி.பி.டி. இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ். இந்நிறுவனம் ரயில் இருப்புபாதைகளுக்கான கான்கிரீட் ஸ்லீப்பர் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஒராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 146 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று இப்பங்கின் விலை ரூ.153.80ஆக இருந்தது.
எல் அண்ட் டி: பொறியியல், கட்டுமானம், தொழில்நுட்பம் என பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் நிறுவனம் லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட். கடந்த ஒராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 61 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கு விலை நேற்று ரூ.3,400.05ஆக இருந்தது.
ஜெ.குமார் இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ்: சிவில் கட்டுமானம் உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் நிஜெ.குமார் இன்ப்ராப்ராஜெக்ட்ஸ். பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.444.45ஆக இருந்தது. கடந்த ஒராண்டில் இப்பங்கின் விலை 57 சதவீதம் அதிகரித்துள்ளது.
எச்.ஜி.இன்ப்ரா என்ஜினீயரிங்: பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட சேவைகளில் முன்னணி நிறுவனமாக எச்.ஜி.இன்ப்ரா என்ஜினீயரிங் விளங்குகிறது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.833.80ஆக இருந்தது. கடந்த ஒராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 44 சதவீதம் அதிகரித்துள்ளது
ஐ.ஆர்.பி.: கட்டுமான என்ஜினீயரிங் நிறுவனம் ஐ.ஆர்.பி. இன்ப்ராஸ்ட்ரெக்சர் டெவலப்பர்ஸ் லிமிடெட். மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் பங்கின் விலை ரூ.40.07ஆக இருந்தது. கடந்த ஒராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 32 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications