கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது சற்றே ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில் 10ல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது,2,00,280.75 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.
இதில் டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனம் டாப் லூசராக உள்ளது. இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பங்கு சந்தைகள் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
கடந்த வாரத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 952.35 புள்ளிகள் அல்லது 1.59% சரிவினைக் கண்டுள்ளது. இது நிலவி வரும் அரசியல் பதற்றம், அன்னிய முதலீடுகள், சர்வதேச அளவிலான மந்தமான காரணிகள் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளது.
லூசர்கள் யார்?
கடந்த வாரத்தில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்ஸ்டஸ்ட்ரீஸ் , டிசிஎஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கண் நஷ்டத்தினை கண்ட நிறுவனங்களில் அடங்கும். இதே ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அதானி டிரான்ஸ்மிஷன், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும் இருந்தனர்.
டிசிஎஸ் & இன்ஃபோசிஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 76,346.11 கோடி ரூபாய் குறைந்து, 11,00,880.49 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 55,831.53 கோடி ரூபாய் குறைந்து, 5,80,312.32 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஆர்ஐஎல் & ஹெச் யு எல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 46,852.27 கோடி ரூபாய் குறைந்து, 16,90,865.41 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 14,015.31 கோடி ரூபாய் குறைந்து, 5,94,058.91 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி & ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி-யின் சந்தை மூலதனமானது 4620.81 கோடி ரூபாய் குறைந்து, 4,36,880.78 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் 33,861.41 கோடி ரூபாய் அதிகரித்து, 8,44,922.53 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ
எஸ்பிஐ சந்தை மூலதனமானது, 7,273.55 கோடி ரூபாய் அதிகரித்து, 5,01,206.19 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் சந்தை மூலதனமானது, 6,435.71 கோடி ரூபாய் அதிகரித்து, 4,41,348.83 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி வங்கியின் சந்தை மதிப்பானது 5286.92 கோடி ரூபாய் அதிகரித்து, 6,33,110.48 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், இன்ஃபோசிஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அதானி டிரான்ஸ்மிஷன், பஜாஜ் பைனான்ஸ், ஹெச் டி எஃப் சி உள்ளிட்ட பங்குகள் அடங்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications