ஒரு நிறுவனம் தனது பங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதே விகிதத்தில் ஒரு பங்கின் விலையை குறைப்பதே பங்கு பிரிப்பாகும். இது முதலீட்டின் மொத்த மதிப்பை மாற்றாது ஆனால் முதலீட்டாளர்கள் முன்பை விட அதிகமான பங்குகளை பெறுவார்கள். பங்கு பிரிப்பால், பங்குகளை வாங்குவது எளிது,முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் போன்ற பல நன்மைகள் உள்ளன. இந்த மாதம் ஐஓஎல் உள்பட 7 நிறுவனங்கள் பங்கு பிரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளன.
ஐஓஎல் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூட்டிக்கல்ஸ் பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை மார்ச் 11ம் தேதியாக நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.2 முகமதிப்பு கொண்ட ஐந்து பங்குகளாக பிரிக்க உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.346.35ஆக இருந்தது.

மெஹாய் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம் ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட பத்து பங்குகளாக பிரிக்க உள்ளது. இந்த பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை மார்ச் 14ம் தேதியாக நிர்ணயம் செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.125.10ஆக இருந்தது.
ஷாலிமார் ஏஜென்சீஸ் நிறுவனத்தின் பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை மார்ச் 14ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட பத்து பங்குகளாக பிரிக்க உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.80.90ஆக இருந்தது.
ஷங்கா டெகோர் நிறுவனம் பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை மார்ச் 14ஆக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் ரூ.5 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட ஐந்து பங்குகளாக பிரிக்க உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.4.86ஆக இருந்தது.
சிகா இன்டர்பிளாண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனம் ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.2 முகமதிப்பு கொண்ட ஐந்து பங்குகளாக பிரிக்க உள்ளது. இந்நிறுவனம் பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை மார்ச் 17ஆக அறிவித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.2,470.15ஆக இருந்தது.
லாஸ்ட் மைல் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தனது ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட பத்து பங்குகளாக பிரிக்க உள்ளது.இந்நிறுவனம் பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை மார்ச் 21ஆக அறிவித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.251.75ஆக இருந்தது.
ஆப்டிமஸ் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட பத்து பங்குகளாக பிரிக்க உள்ளது.இந்நிறுவனம் பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை மார்ச் 21ஆக அறிவித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.213.65ஆக இருந்தது.
Story written by: Subramanian
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications