இந்திய பங்குச்சந்தைகளை பொறுத்துவரை இந்த வாரம் மிகவும் பிஸியான வாரமாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த வாரம் மட்டும் 8 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு மூலம் 1,483.2 கோடி ரூபாயை திரட்ட உள்ளன. இதனால் ஐபிஓ முதலீடுகளில் ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்களுக்கு பெரிய ஜாக்பாட் தான்.
ஆர்.கே. ஸ்வாமி ஐபிஓ: ஆர்.கே.ஸ்வாமி நிறுவனம் தரவு சார்ந்த ஒருங்கிணைந்த சந்தைப்படுத்துதல் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஐபிஓ மூலமாக 423 கோடி ரூபாயை திரட்ட முடிவு செய்துள்ளது. மார்ச் 4 முதல் 6ஆம் தேதி வரை ஐபிஓ விண்ணப்பம் செய்ய முடியும். புதிதாக பங்கு வெளியீடு மற்றும் ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் என பங்குகள் வெளியாகின்றன. ஒரு பங்கின் விலையானது 270 முதல் 288 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜேஜி கெமிக்கல்ஸ்: ஸின்க் ஆக்சைடு உற்பத்தியாளரான ஜேஜி கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ மார்ச் 5ஆம் தேதி வெளியிடப்படுகிறது. முதலீட்டாளர்கள் 7ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பம் செய்யலாம். ஒரு பங்கின் விலை 210 முதல் 221 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 251 கோடி ரூபாயை திரட்ட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கோபால் ஸ்நாக்ஸ் : ராஜ்கோட்டை தலைமையிடமாக கொண்டு ஸ்நாக்ஸ் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது கோபால் ஸ்நாக்ஸ் நிறுவனம். ஏற்கனவே உள்ள பங்குதாரர்கள் ஆஃபர் ஆஃப் சேல்ஸ் முறையில் பங்குகளை வெளியிடுகின்றனர். ஒரு பங்கின் விலையானது 381 முதல் 401 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6ஆம் தேதி முதல் மார்ச் 11ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
வி.ஆர். இன்ஃபிராஸ்பேஸ்: சிறு மற்றும் மத்திய தர நிறுவனங்களின் இந்த வாரம் வெளியாகும் முதல் ஐபிஓ இது. குஜராத்தை தலைமையிடமாக கொண்ட இந்த ரியஸ் எஸ்டேட் நிறுவனம், ஐபிஓ மூலம் 20 கோடி ரூபாயை திரட்ட முடிவு செய்துள்ளது. மார்ச் 4 முதல் 6 வரை இதற்கு விண்ணப்பம் செய்யலாம். ஒரு பங்கின் விலை 85 ரூபாய் ஆகும்.
சோனா மெசினரி: உத்தரபிரதேசத்தை சேர்ந்த வேளாண் இயந்திர தயாரிப்பு நிறுவனமான சோனா மெசினரி இந்த வாரம் முதன்முறையாக ஐபிஓ வெளியிடுகிறது. மார்ச் 5 முதல் 7ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும். ஒரு பங்கின் விலை 136 முதல் 143 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 51.82 கோடி ரூபாயை திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீ கர்னி ஃபேப்காம்: குஜராத்தை தலைமையிடமாக கொண்டு துணி நூல் நிறுவனம் இது. புதிதாக ஐபிஓ வெளியீடும் இந்த நிறுவனம் 42.5 கோடி ரூபாயை திரட்ட முடிவு செய்துள்ளது. ஒரு பங்கின் விலை 220-227 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்ச் 6 முதல் மார்ச் 11 வரை விண்ணப்பம் செய்யலாம்.
கௌரா ஃபைன் டைமண்ட் ஜூவல்லரி : அகமதாபாத்தை சேர்ந்த கோல்டு அண்ட் டைமண்ட் ஜுவல்லரி நிறுவனம் இது. ஒரு பங்கின் மதிப்பு 55 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6 முதல் 11ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
புனே ஈ-ஸ்டாக் புரோக்கிங்: புனே ஈ-ஸ்டாக் புரோக்கிங் என்ற சிறு நிறுவனத்தின் ஐபிஓ மார்ச் 7ஆம் தேதி வெளியாகி 12ஆம் தேதி முடிகிறது. ஒரு பங்கின் விலை 78 முதல் 83 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர கடந்த வாரம் வெளியான பிளாட்டினம் இண்டர்ஸ்டிரீஸ், எக்ஸிகாம் டெலி சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படுகின்றன.
Story Written by: Devika
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications