கடந்த வாரத்தில் இந்திய பங்கு சந்தையானது கடும் ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், வார இறுதியில் கடும் சரிவினைக் கண்டது. இதன் காரணமாக பல்வேறு சிறந்த நிறுவனங்களின் பங்குகள் கூட கடும் வீழ்ச்சியினை சந்தித்துள்ளன.
குறிப்பாக சிறந்த 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 1,03,732.39 கோடி ரூபாய் சரிவினை கண்டுள்ளது.
மோசமான இழப்பு யாருக்கு?
இந்திய சந்தையில் ஏற்பட்ட இந்த சரிவானது, சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இருந்தது. இந்த இழப்பினில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், ஐசிஐசிஐ வங்கியும் முக்கிய இடம் பெற்றுள்ளது.
கடந்த வாரத்தில் சந்தையில் ஒரு நாள் விடுமுறை என்ற நிலையில் கூட, ஏற்ற இறக்கம் என்பது அதிகம் என்பதால், சந்தையில் சரிவும் மோசமாக இருந்தது.
சென்செக்ஸ் வீழ்ச்சி
குறிப்பாக வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்தையில் சரிவானது, கடும் வீழ்ச்சியினை கண்டுள்ளது. இதற்கிடையில் 30 பங்குகள் அடங்கிய சென்செக்ஸ் கடந்த வாரத்தில் 673.84 அல்லது 1.12% வீழ்ச்சியினை கண்டுள்ளது.
டாப் லூசர்ஸ்
சிறந்த 10 நிறுவனங்களில் பார்தி ஏர்டெல் மற்றும் ஐடிசி மற்றுமே கடந்த வாரத்தில் கெயினர்களாக இருந்தன. மற்ற 8 நிறுவனங்களுமே சந்தை மதிப்பில் பெரும் இழப்பினை கண்டுள்ளன.
குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 41,878.37 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 15,71,724.26 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது டாப் 10 நிறுவங்களில் முதல் பெரிய இழப்பீட்டாளராகவும் இருந்தது.
ஐசிஐசிஐ வங்கி & ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இதே நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியானது, 18,134.73 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 5,88,379.98 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பானது 15,007.38 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 8,86,300.20 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
எஸ்பிஐ & ஹெச்.டி.எஃப்.சி
நாட்டின் முதல் மற்றும் பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மதிப்பு, 12,360.59 கோடி ரூபாய் சரிந்து, 4,88,399.39 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 6,893.18 கோடி ரூபாய் குறைந்து, 4,77,524.24 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
டிசிஎஸ் & இன்ஃபோசிஸ்
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 4281.09 கோடி ரூபாய் குறைந்து, 12,18,848.31 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 3,555.83 கோடி ரூபாய் குறைந்து, 6,19,155.97 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஹெச்.யு.எல் & பார்தி ஏர்டெல்
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 1621.22 கோடி ரூபாய் குறைந்து, 5,78,739.57 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
எப்படியிருப்பினும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 5071.99 கோடி ரூபாய் அதிகரித்து, 4,31,230.51 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே ஐடிசியின் சந்தை மதிப்பானது 4036.2 கோடி ரூபாய் அதிகரித்து, 4,81,922.33 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
டாப் 10 நிறுவனங்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதனை தொடர்ந்து டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐடிசி, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் சந்தை மதிப்பின் அடிப்படையில் டாப் 10 நிறுவனங்களாக உள்ளன.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications