கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில் 10ல் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, 2,21,555.61 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
எனினும் இதில் வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி கீரின் எனர்ஜி நிறுவனம் மட்டும் கெயினர்களாக உள்ளன.
இதே காலகட்டத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 1141.78 புள்ளிகள் அல்லது 1.95% சரிவினைக் கண்டுள்ளது.
டாப் 10 நிறுவனங்கள்
இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், அதானி கீரின் எனர்ஜி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 1,39,357.52 கோடி ரூபாய் அதிகரித்து, 18,66,071.57 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 2,758.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
அதானி கீரின் எனர்ஜி
அதானி கீரின் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலையானது 3698.89 கோடி ரூபாய் அதிகரித்து, 4,51,749.88 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே அதானி கீரின் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.54% அதிகரித்து, 2,882.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 68,548.8 கோடி ரூபாய் குறைந்து, 6,67,062.55 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.06% குறைந்து, 1,585.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மூலதனம் 60,536.97 கோடி ரூபாய் குறைந்து, 7,51,801.60 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்கு விலையானது 1.36% குறைந்து, 1,355.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல்லின் சந்தை மூலதனம் 30,127.49 கோடி ரூபாய் குறைந்து, 4,05,723.51 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலையானது 0.41% அதிகரித்து, 738.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 18,094.01 கோடி ரூபாய் குறைந்து, 13,21,594.47 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று குறைந்து,3,612.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
இதே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் 15,261.09 கோடி ரூபாய் குறைந்து, 4,46,587.56 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 3.04% குறைந்து, 500.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் சந்தை மூலதனமானது,13,264.96 கோடி ரூபாய் குறைந்து, 4,30,420.83 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.38% குறைந்து, 7110.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி வங்கியின் சந்தை மதிப்பானது 10,376.97 கோடி ரூபாய் குறைந்து, 5,19,362.62 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.93% குறைந்து, 747.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 5435.32 கோடி ரூபாய் குறைந்து, 5,00,392.45 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலையானது, 3.23% குறைந்து, 2,126.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications