மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.
இன்று காலையில் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் உயர்வாகவே இருந்த நிலையில், ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்றனர். இதன் வாயிலாக மதிய நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் சரிந்தது.

புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 63.38 புள்ளிகள் சரிந்து 34,331.68 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 22.50 புள்ளிகள் சரிந்து 10,526.20 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஆக்சிஸ் வங்கி 2.60 சதவீதம் வரை சரிந்தது. இதைதொடர்ந்து மஹிந்திரா, இண்டஸ்இந்த் வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப் ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications