கடந்த வாரத்தில் சந்தை சற்று ஏற்றம் கண்ட நிலையில் 10ல் 9 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, 1,11,012.63 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதில் டிசிஎஸ் மற்றும் ஹெச் டி எஃப் சி வங்கி நிறுவனத்தில் பங்குகள் டாப் லிஸ்டில் உள்ளன.
இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ், டிசிஎஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஹெச் டி எஃப் சி, பஜாஜ் பைனான்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் விப்ரோ உள்ளிட்ட பங்குகள் உள்ளன.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 24,635.68 கோடி ரூபாய் அதிகரித்து, 13,82,280.01 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று அதிகரித்து,3,738.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மூலதனம் 22,554.33 கோடி ரூபாய் அதிகரித்து, 8,20,164.27 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனத்தின் பங்கு விலையானது 1.22% அதிகரித்து, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 1,479.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 14,391.25 கோடி ரூபாய் அதிகரித்து, 5,40,053.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலையானது, 1.49% அதிகரித்து, 2,360.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 17,656.95 கோடி ரூபாயாக அதிகரித்து, 5,54,444.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 1,887.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச் டி எஃப் சி
ஹெச் டி எஃப் சி-ன் சந்தை மூலதனமானது 9,641.77 கோடி ரூபாய் அதிகரித்து, 4,68,480.66 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஹெச் டி எஃப் சி நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 2,586.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
விப்ரோ
விப்ரோ நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 9,164.13 கோடி ரூபாய் அதிகரித்து, 3,92,021.38 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 715.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி வங்கியின் சந்தை மதிப்பானது 8902.89 கோடி ரூபாய் அதிகரித்து, 5,13,973.22 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 740.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் சந்தை மூலதனமானது, 7,575.11 கோடி ரூபாய் அதிகரித்து, 4,21,121.74 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.55% அதிகரித்து, 6,977.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
இதே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் 3,212.86 கோடி ரூபாய் அதிகரித்து, 4,10,933.74 ரூபாயாக குறைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.94% அதிகரித்து, 460.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 2,772.49 கோடி ரூபாய் குறைந்து, 16,01,382.07 கோடி ரூபாயாக குறைந்துள்ளது
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 2,368.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது. .
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications