ரிலையன்ஸூக்கு பலத்த இழப்பு.. 9 நிறுவனங்களுக்கு ஒரே வாரத்தில் ரூ.3 லட்சம் கோடி நஷ்டம்..!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில் 10ல் 9 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, 3,09,178.44 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளது.

இதில் வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ்,இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் லிஸ்டில் உள்ளன.

பிஎஸ்இ சென்செக்ஸ் 1836.95 புள்ளிகள் அல்லது 3.11% குறைந்துள்ளது. அரசியல் பதற்றம், அன்னிய முதலீடுகள், சர்வதேச அளவிலான காரணிகள் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளது.

டாப் 10 நிறுவனங்கள்

டாப் 10 நிறுவனங்கள்

இந்த டாப் 10 நிறுவனங்களில் எஸ்பிஐ மட்டும் டாப் கெயினராகவும், இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச் டி எஃப் சி, பஜாஜ் பைனான்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பார்தி ஏர்டெல் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 96,512.22 கோடி ரூபாய் குறைந்து, 15,79,779.47 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 2335.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

டிசிஎஸ்

டிசிஎஸ்

டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 53,488.29 கோடி குறைந்து, 13,65,042.43கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 1.12% அதிகரித்து,3690.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 42,392.63 கோடி ரூபாயாக குறைந்து, 7,08,751.77 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 1686.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மூலதனம் 31,815.01 கோடி ரூபாய் குறைந்து, 8,11,061.12 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 0.79% குறைந்து, 1463.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ்

பஜாஜ் பைனான்ஸ்

பஜாஜ் பைனான்ஸ் சந்தை மூலதனமானது,30,333.64 கோடி ரூபாய் குறைந்து, 4,14,699.49 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.44% அதிகரித்து, 6867.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி வங்கியின் சந்தை மதிப்பானது 16,291.53 கோடி குறைந்து, 5,42,407.86கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.70% குறைந்து, 781.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்லின் சந்தை மூலதனம் 15,814.77 கோடி ரூபாய் குறை3,93,174.23 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 1.21% அதிகரித்து, 715.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹெச் டி எஃப் சி

ஹெச் டி எஃப் சி

ஹெச் டி எஃப் சி-ன் சந்தை மூலதனமானது 13,319.96 கோடி குறைந்து, 4,56,102.42 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஹெச் டி எஃப் சி நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 2516.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 9210.39 கோடி ரூபாய் குறைந்து, 5,36,411.69 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலைய0.51% குறைந்து, 2283.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

இதே டாப் 10 நிறுவனங்களில் ஒரே நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் 18,340.07 கோடி ரூபாய் அதிகரித்து, 4,67,069.54 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.04% குறைந்து, 523.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+