பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சிலர், பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர்களை பின்பற்றி முதலீடு செய்வார்கள். அதாவது பிரபல முதலீட்டாளர்கள் எந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்து உள்ளார்கள் என்பதை கவனித்து கொள்வார்கள்.
பின்னர் அது அந்நிறுவன பங்குகளை குறித்து கொஞ்சம் ஆய்வு செய்து முதலீடு செய்வது குறித்து முடிவு செய்வார்கள். அந்த வகையில் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் டோலி கன்னா மல்டிபேக்கர் பங்கு ஒன்றில் தனது முதலீட்டை அதிகரித்து இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சவேரா இண்டஸ்ட்ரீஸ்: டோலி கன்னா தனது பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ள அந்த மல்டிபேக்கர் பங்கு சவேரா இண்டஸ்ட்ரீஸ் (Savera Industries). இந்நிறுவனம் விருந்துதோம்பல் துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் வலுவான நிதி நிலை முடிவுகளை கொண்டுள்ளது.
கடந்த 202-23ம் நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.12.47 கோடி ஈட்டியுள்ளது. 2023 ஜூன் காலாண்டில் ரூ.2.69 கோடியும், செப்டம்பர் காலாண்டில் ரூ.3.01 கோடியும் நிகர லாபமாக இந்நிறுவனம் ஈட்டியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.148.35ஆக இருந்தது.
2023 செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, சவேரா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் டோலி கன்னாவின் பங்கு மூலதனம் 1.21 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவன பங்குகளை மேலும் வாங்கியுள்ளார்.
இதனையடுத்து 2023 டிசம்பர் காலாண்டு இறுதியில், இந்நிறுவனத்தில் டோலி கன்னாவின் பங்கு மூலதனம் 0.06 சதவீதம் உயர்ந்து 1.27 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் சவேரா இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 104 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 16 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.
கண்ட்ரோல் பிரிண்ட்: டோலி கன்னா கடந்த டிசம்பர் காலாண்டில் மற்றொரு மல்டிபேக்கர் பங்கான கண்ட்ரோல் பிரிண்ட் (Control Print) நிறுவனத்திலும் தனது பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ளார். இந்நிறுவனம் கோடிங் மற்றும் மார்க்கிங் கருவி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் கோடிங் மற்றும் மார்க்கிங் தொடர்பான திரவ மை, மை ரிப்பன்கள் போன்ற நுகர்பொருட்களையும் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. கடந்த ஒராண்டில் கண்ட்ரோல் பிரிண்ட் பங்கு முதலீட்டாளர்களுக்கு 111 சதவீதம் ஆதாயம் வழங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.989.95ஆக இருந்தது.
பிற முக்கிய பங்குகள்: கடந்த டிசம்பர் காலாண்டில், உஜ்ஜீவன் பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் ஜூவாரி இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜேகுமார் இன்ப்ராபுராஜெக்ட்ஸ் நிறுவன பங்குகளையும் வாங்கியுள்ளார். 2023 டிசம்பர் காலாண்டில், JKumar Infraprojects நிறுவனத்தின் 7,58,303 பங்குகளை வாங்கியுள்ளார்.
உஜ்ஜீவன் பைனான்சியல சர்வீசஸ் நிறுவனத்தின் டோலியின் பங்கு மூலதனம் 1.13 சதவீதமாகவும், ஜூவாரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பங்கு மூலதனம் 1.23 சதவீதமாகவும் இருந்தது. மேலும் ஸ்மால்கேப் கேசிபி சுகர் அண்டு இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மங்களூர் கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களில் தனது பங்கு மூலதனத்தை அதிகரித்தார்.
அதேசமயம், இந்த காலகட்டத்தில் மல்டிபேக்கர் பங்கான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் தனது பங்கு மூலதனத்தை அவர் குறைத்துள்ளார்.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications