பங்குச் சந்தையில் சமீபகாலமாக டான்பாக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அனுபம் ரசாயன் இந்தியா லிமிடெட் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கூட்டு வர்த்தக நிறுவனம் தான் டான்பாக் இண்டஸ்ட்ரீஸ்.
இந்நிறுவனம் ஹைட்ரோபுளோரிக் அமிலம் மற்றும் அதன் வழிதோன்றல்களின் உற்பத்திக்காக பெயர் பெற்றது. 1985 முதல் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அன்ஹைட்ரோபுளோரிக் அமிலம் மற்றும் அலுமினியம் புளோரைடு ஆகியவற்றின் மிகப்பெரிய இந்திய உற்பத்தியாளர்களில் ஒருவர். மேலும் சர்வதேச அளவில் ரசாயன உற்பத்தியில் 6வது பெரிய உற்பத்தியாளராகவும், 14வது பெரிய ஏற்றுமதியாளராகவும் இந்நிறுவனம் உள்ளது.

பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் டான்பாக் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கி குவித்து வருவதால், அந்நிறுவன பங்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது . பிரபல முதலீட்டாளர் ஆஷிஷ் கச்சோலியா இந்நிறுவனத்தில் 1.9 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார்.
கடந்த டிசம்பர் காலாண்டில் முகுல் அகர்வாலின் மனைவி மதுலிகா அகர்வால் இந்நிறுவனத்தின் 1.80 சதவீத பங்குகளை வாங்கினார். 2023 மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் டான்பாக் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 120 சதவீதம் உயர்ந்த நிலையில், கடந்த டிசம்பர் காலாண்டில் அவர்கள் இருவரும் இந்நிறுவன பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் காலாண்டில் மட்டும் டான்பாக் இண்ட்ஸ்டரீஸ் பங்கு விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023 மார்ச் 17ம் தேதியன்று ரூ.875 என்ற அளவில் இருந்த இந்நிறுவன பங்கின் விலை 2023 டிசம்பர் 4ம் தேதியன்று புதிய 52 வார உயர்வான ரூ.2,778.70ஐ எட்டியது. இடைப்பட்ட காலத்தில் இப்பங்கின் விலை 217 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஸ்மால்கேப் பங்கான டான்பாக் இண்டஸ்ட்ரீஸ் ஒரு மல்டிபேக்கர் பங்காக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இப்பங்கின் விலை ரூ.2,379.05ஆக இருந்தது. தற்போது இப்பங்கின் விலை அதன் 52 வார உச்சத்தில் இருந்து சுமார் 14 சதவீதம் குறைவாக உள்ளது.
டான்பாக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் நிதி நிலவரம் மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் உபரி பணத்தை கொண்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.374.95 கோடியும், நிகர லாபமாக ரூ.56.13 கோடியும் ஈட்டியுள்ளது.
குளிர்சாதன சாதனங்கள், துருப்பிடிக்காத ஸ்டீல், சோலார் செல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மருந்து மற்றும் விவசாய பொருட்கள் போன்ற பல்வேறு தொழில்களில் ஹைட்ரோபுளோரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த ரசாயனத்துக்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
தற்போது இந்நிறுவனம் தனது ஹைட்ரோபுளோரிக் அமிலம் உற்பத்தி திறனை அதிகரிக்க விவேகமான திட்டமிடலை செய்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்நிறுவனத்துக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உள்ளது. எனவே இந்நிறுவன பங்கும் நல்ல ஆதாயம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications