இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் தலையாய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் (AEL), அடுத்து நடக்க இருக்கும் சென்செக்ஸ் குறியீட்டின் மறுசீரமைப்பில், விப்ரோ நிறுவனத்திற்குப் பதிலாகச் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது என IIFL ஆல்டர்நேடிவ் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீடுகளை மதிப்பீடு செய்யும் அரை வருடாந்திர நடைமுறையின் ஒரு பகுதியாக, விப்ரோ நிறுவனத்தை நீக்கிவிட்டு அதானி என்டர்பிரைசஸ் (AEL) இடம்பெறும் எனவும், இந்த தகவல் மும்பை பங்குச்சந்தை மே 24 ஆம் தேதி வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் குறியீட்டில், கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்திற்குச் சொந்தமான எந்த நிறுவனமும் இதுவரை இடம்பெறவில்லை. 2023 ஆம் ஆண்டிலேயே அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் சென்செக்ஸில் இணைக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஹிண்டன்பெர்க் விவகாரத்தில் இதன் சந்தை மதிப்பு மோசமான நிலைக்குப் பாதித்தது.
இதனால் அந்த வாய்ப்பை அதானி குழுமம் இழந்தது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக அதானி என்டர்பிரைசஸ் பங்கு மதிப்பு உயர்ந்து வருவதைத் தொடர்ந்து விப்ரோ நிறுவனம் நீக்கப்பட்டு இந்த இடத்தை இது பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IIFL ஆல்டர்நேடிவ் ரிசர்ச் நிறுவனத்தின் தகவல்படி, அதானி என்டர்பிரைசஸ் சென்செக்ஸ் குறியீட்டில் இணைவதால், குறியீட்டில் உள்ள நிறுவனங்கள் கூடுதலாக 1,000 கோடி முதலீட்டைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, விப்ரோ நிறுவனம் சென்செக்ஸில் இருந்து நீக்கப்படுவதால், 500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வெளியேறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சென்செக்ஸ் மட்டுமல்லாமல், BSE 100 குறியீட்டிலும் ஐந்து நிறுவனங்கள் சேர்க்கப்படவும், ஐந்து நிறுவனங்கள் நீக்கப்படவும் வாய்ப்புள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி, ICICI புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி, பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ஜீ என்டர்டெயின்மென்ட் என்டர்பிரைசஸ், SBI கார்ட்ஸ் அண்ட் பேமெண்ட் சர்வீசஸ், மற்றும் ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் நீக்கப்பட்டு, இந்த இடத்தில் REC, ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், அதானி பவர், அதானி கிரீன் எனர்ஜி, மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
அதானி என்டர்பிரைசஸ் பங்குகளின் மதிப்பு இந்த ஆண்டு ஜனவரி முதல் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதே சமயம், விப்ரோ பங்குகளின் மதிப்பு இந்த ஆண்டில் 2.3 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications