இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் மிகவும் முக்கியமானதாக திகழும் அதானி குழுமம் தேர்தல் முடிவுகளும், மோசமான பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு மத்தியில் இக்குழும பங்குகள் ஜூன் 4ஆம் தேதி வர்த்தகத்தில் அதிகபட்சமாக 25 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
கடந்த சில வாரங்களில் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டிய அதானி குழும பங்குகள், இந்த திடீர் சரிவு முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செவ்வாய்க்கிழமை சரிவின் மூலம் திங்கட்கிழமை பதிவான மொத்த உயர்வைக் காட்டிலும் 2 மடங்கும் அதிக சந்தை மதிப்பை அதானி குழுமம் செவ்வாய்க்கிழமை இழந்துள்ளது.

இந்த நிலையில் துறைமுகங்கள் முதல் சமையல் எண்ணெய் வர்த்தகம் வரை பல்வேறு துறைகளில் செயல்படும் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் புதன்கிழமை அன்று (ஜூன் 5) உயர்வைக் கண்டன. இதன் வாயிலாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் இதன் சந்தை மதிப்பு ரூ.1.25 லட்சம் கோடி வரை அதிகரித்தன.
இதன் மூலம், அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு புதன்கிழமை வர்த்தக முடிவில் ரூ.16.77 லட்சம் கோடியாக உயர்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடியும், தொழிலதிபர் கௌதம் அதானியும் நீண்ட கால நண்பர்கள் ஆவார்கள். இருவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, கௌதம் அதானி வளர்ச்சிக்கு நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராக இருந்ததிலிருந்து தற்போது பிரதமராக இருந்தது வரையில் பல உதவிகளை செய்துள்ளதாக விமர்சனம் தொடர்ந்து எழுகிறது. ஆனால் இதுவரையில் எதையும் நிரூபணம் செய்யப்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
அதானி குழுமம் தற்போது நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய நிறுவனம், துறைமுக நிறுவனம், நிலக்கரி சப்ளை நிறுவனம், மின்சார விநியோக நிறுவனம், சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் என பல பட்டங்களைப் பெற்றுள்ளது. மேலும் மோடி தலைமையிலான ஆட்சி காலத்தில் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பும், அவரது சொத்து மதிப்பும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
கௌதம் அதானி தற்போது இந்தியாவில் 2வது பெரும் பணக்காரராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 83.8 பில்லியன் டாலராகும்.
இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும நிறுவனங்களில், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக 10% உயர்ந்தன. அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 9%க்கும் மேல் உயர்ந்தன. அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 7% க்கும் மேல் உயர்ந்தன.
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 7% உயர்ந்தன, அதே நேரத்தில் NDTV நிறுவனத்தின் பங்குகள் 5% க்கும் மேல் உயர்ந்தன.
ACC லிமிடெட், சங்கி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அதானி டோடல் கேஸ் லிமிடெட் மற்றும் அதானி வில்மர் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்தன.


Click it and Unblock the Notifications