கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் மின்சாரம் முதல் துறைமுகம் வரை பல்வேறு துறைகளை சார்ந்த வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது. அதானி குழும நிறுவனங்களில் ஒன்றான அதானி பவர் நிறுவனம் மின் உற்பத்தி வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் அதானி பவர் நிறுவனத்துக்கு சொந்தமாக இரண்டு 800 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்ட புதிய அனல் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
மின்சார கொள்முதல்
இந்த உற்பத்தி நிலையங்களிலிருந்து 25 ஆண்டுகளுக்கு 1500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய அதானி பவர் நிறுவனத்திடம் உத்தர பிரதேச பவர் கார்ப்பரேஷன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான முறையான ஆவணத்தை அதானி பவர் நிறுவனத்திடம் உத்தர பிரதேச பவர் கார்ப்பரேஷன் வழங்கியது.

டெண்டர்
இது தொடர்பாக அதானி பவர் நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், உத்தர பிரதேச பவர் கார்ப்பரேஷன் வெளியிட்ட டெண்டரில், ஏல செயல்முறையை தொடர்ந்தும். டெண்டரின் விதிகளின்படியும், 25 ஆண்டுகளுக்கு 1,500 மெகா வாட் மின்சாரம் சப்ளை செய்வதற்கான ஆர்டர் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய ஒப்பந்தம் மூலம் அதானி பவர் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி காணும்.
இந்த செய்தி வெளியானதையடுத்து, இன்று காலையில் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே அதானி பவர் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 7.49 சதவீதம் உயர்ந்து ரூ.552 வரை சென்றது. 2024 நவம்பர் 21ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.430.85க்கு சென்றது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
லாபம்
அதானி பவர் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.11,260.95 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த காலாண்டில் அதானி பவர் நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,539.57 கோடி ஈட்டியுள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் அதானி பவர் நிறுவனம் வருவாயாக ரூ.39,204.57 கோடி ஈட்டியிருந்தது. மேலும் அந்த நிதியாண்டில் அதானி பவர் நிறுவனம் நிகர லாபமாக ரூ.18,749.24 கோடி ஈட்டியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் நவீன மயமாக்கல் ஆகியவற்றின் விளைவாக அம்மாநிலத்தில் அனல் மின்சார தேவை அதிகரித்து வருகிறது. 2033-34ம் நிதியாண்டில் அம்மாநிலத்தின் அனல் மின்சார தேவை 11,000 மெகா வாட்டாக அதிகரிக்கும். அந்த எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்வதற்கான யோகி அரசாங்கத்தின் முயற்சியில் இந்த 1,500 மெகா வாட் கொள்முதலும் அடங்கும்.
அதிரடியாக நடந்த சம்பவம்.. 1 மணி நேரம் வர்த்தகத்தை நிறுத்திய கராச்சி பங்குச் சந்தை
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications