ரூ.25 டிவிடெண்ட் கொடுக்கும் மல்டிபேக்கர் பங்கு.. ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் முதலீட்டாளர்கள் குஷி

ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம், தனிப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்ளின் தேவைகளுக்கு ஏற்றவாறு பலதுறை,நம்பகமான மற்றும் செலவு குறைந்த இணைப்பு தீர்வுகளை வழங்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.

1988ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு இத்துறைக்கு 35 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளது. ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் தொலைத்தொடர்பு மற்றும் தரவு நெட்வொர்க்கிங் தீர்வுகளில் செம்பு மற்றும் ஃபைபர் பிசிக்கல இணைப்பை வழங்குகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது மற்றும் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது.

ரூ.25 டிவிடெண்ட் கொடுக்கும் மல்டிபேக்கர் பங்கு.. ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் முதலீட்டாளர்கள் குஷி

ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.5.83 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 8.7 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.6.38 கோடியாக இருந்தது.

மேலும் கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர வருவாய் 0.34 சதவீதம் குறைந்து ரூ.41.93 கோடியாக சரிவடைந்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.42.07 கோடியாக இருந்தது. 2024 டிசம்பர் காலாண்டில் ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கு வருமானம் ரூ.12.66ஆக குறைந்தது. இது 2023 டிசம்பர் காலாண்டில் ரூ.13.87ஆக இருந்தது.

கடந்த 3 ஆண்டுகளில் ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 361 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 144 சதவீதம் அதிகரித்துள்ளது.

இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை 5.69 சதவீதம் குறைந்து ரூ.1,340.30ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.617 கோடியாக இருந்தது. இந்நிறுவனம் அண்மையில் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.25 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்தது.

இது தொடர்பாக ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவன வெளியிட்ட அறிக்கையில், 2025 மார்ச் 25ம் தேதி நடைபெற்ற நிறவனத்தின இயக்குனர்கள் குழு கூட்டத்தில், 2024-25ம் நிதியாண்டுக்கு தலா ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்குகளுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.25 அறிவிக்கப்பட்டது.

டிவிடெண்ட் பெற உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கான பதிவு தேதி ஏப்ரல் 2ம் தேதியாகும். மேற்கூறிய இடைக்கால டிவிடெண்ட் ஏப்ரல் 23ம் தேதியன்று அல்லது அதற்கு முன் செலுத்தப்படும் என்று தெரிவித்து இருந்தது. அதன்படி,ஏடிசி இந்தியா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவன பங்குகள் இன்று எக்ஸ் டிவிடெண்ட் வர்த்தகத்தில் நடைபெறுகிறது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+