ஆயிரங்களில் முதலீடு செய்தவர்களை கோடீஸ்வரராக்கிய பங்கு.. ஆஷிஷ் கச்சோலியா முதலீடு செய்துள்ள பங்கு..!

பீகார்: வீட்டு உபயோகத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யக் கூடிய ஒரு நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு கடந்த எட்டு ஆண்டு காலத்தில் சுமார் 22,410 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது. இந்தியாவின் கவனிக்கத்தக்க முதலீட்டாளரான ஆஷிஷ் கச்சோலியா இந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்கி வைத்திருக்கிறார்.

ஆதித்யா விஷன் லிமிடெட் பீகாரை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் வீட்டு உபயோகத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகிறது. தற்போது இது வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகளை திறந்து வருகிறது.

ஆயிரங்களில் முதலீடு செய்தவர்களை கோடீஸ்வரராக்கிய பங்கு.. ஆஷிஷ் கச்சோலியா முதலீடு செய்துள்ள பங்கு..!

1999 ஆம் ஆண்டு ஒரு சிறிய சில்லறைக்கடையாக தொடங்கியதுதான் ஆதித்யா விஷன் லிமிடெட். தற்போது இந்த நிறுவனம் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 132 கடைகளை வைத்துள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2016 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 1.12 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும். 2016 ஆம் ஆண்டில் வெறும் 15 ரூபாயாக இருந்த ஆதித்யா விஷன் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு தற்போது 3,450 என்ற அளவை எட்டியுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற முதலீட்டாளரான ஆஷிஷ் கச்சோலியா இந்த நிறுவனத்தில் 1.87% பங்குகளை வைத்துள்ளார். அதாவது 2,39,056 பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறார். ஆதித்யா விஷன் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது மே 14ஆம் தேதி பங்குச்சந்தையில் 3,470 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. எனவே ஆஷிஷ் கச்சோலியா இந்த நிறுவனத்தில் வைத்துள்ள பங்குகளின் மதிப்பானது கிட்டத்தட்ட 83 கோடி ரூபாய் ஆகும்.

ஆஷிஷ் கச்சோலியா சுமார் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பங்குகளை வாங்கி வைத்துள்ளார். அவரது போர்ட்போலியோவின் மதிப்பு 2,999 கோடி ரூபாய் ஆகும். ஆதித்யா விஷன் நிறுவனத்தை பொறுத்தவரை ஸ்ட்ரென்த் இன்டெக்ஸ் என்பது 51.61 என்ற அளவில் இருக்கிறது. அதாவது இந்த பங்கானது அதிகமாக வாங்கப்படவும் இல்லை அதிகமாக விற்கப்படவும் இல்லை என்ற அளவீட்டில் உள்ளது.

ஆதித்யா விஷன் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 4,384 கோடி ரூபாய் ஆகும். இதன் ஃபேஸ் வேல்யூ 10 ஆகவும் புக் வேல்யூ 359.43 ஆகவும் உள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய் 2023 ஆம் ஆண்டு 1,325 கோடி ரூபாயாக இருந்துள்ளது.நிறுவனத்தின் லாபம் 2023 ஆம் ஆண்டில் 64 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது.

ஆதித்யா விஷன் லிமிடெட்டின் பங்குகளில் 53 சதவீதம் புரமோட்டர்கள் வசமும், சில்லறை முதலீட்டாளர்கள் வசம் 29 சதவீத பங்குகளும் உள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் சுமார் 9 சதவீத பங்குகளை வைத்துள்ளன.

இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 1,255 ரூபாய், 52 வார கால உச்சபட்ச மதிப்பு 3,997 ரூபாய் ஆகும். இந்த நிறுவனத்தின் பங்கு 8 ஆண்டுகளில் 22,410 சதவீத லாபத்தை தந்துள்ளது ,அதாவது 225 மடங்கு லாபம் தந்துள்ளது என்கின்றனர் பங்குச்சந்தை முதலீட்டு நிபுணர்கள்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+