மும்பை: ஸ்மால் கேப் எனப்படும் சிறு நிறுவனங்கள் குறுகிய காலங்களில் பல மடங்கு லாபத்தை அள்ளித் தருபவையாக இருக்கின்றன. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்திய பங்குச் சந்தையில் சிறு நிறுவனங்களின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
அந்த வகையில் அத்வைத் இன்ஃப்ராடெக் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 5000 % லாபத்தை பெற்று தந்துள்ளது.

அத்வைத் இன்ஃப்ராடெக் லிமிடெட் (Advait infrastructure ltd): மின்சார உபகரணங்கள் தயாரிப்பு, மின் பரிமாற்றம், துணை மின் நிலையம் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை நிறுவி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது கடந்த 2021 மார்ச் மாதம் ரூ.25 என்ற அளவில் வர்த்தகமானது. அதுவே தற்போது 5000 % அதிகரித்துள்ளது.
அதாவது தற்போது இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு ரூ.1,374 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. உதாரணத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தவர்கள், தற்போது ரூ.52.14 லட்சம் என லாபம் பெற்றுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை ஆய்வு செய்யும் போது, நிகர வருவாயானது கடந்த நிதியாண்டில் செப்டம்பர் உடனான காலாண்டில் ரூ. 48.95 கோடியாக இருந்தது. இதுவே டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ரூ. 72.61 கோடி என உயர்ந்தது.
அதேபோல இந்த நிறுவனத்தின் நிகர லாபம் என்பது செப்டம்பர் உடன் முடிந்த காலாண்டில் ரூ.5.5 கோடிகளாக இருந்து டிசம்பர் உடன் முடிந்த காலாண்டில் ரூ.7.70 கோடியாக உயர்ந்துள்ளது. இயன் ஆன் இயர் எனப்படும் ஓராண்டுக்கு இடையிலான வளர்ச்சி என பார்க்கும்போது இந்த நிறுவனத்தின் வருவாய் என்பது 186 % அதிகரித்துள்ளது, அதேபோல நிறுவனத்தின் லாபமும் 134 % உயர்வு கண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
அண்மையில் இந்த நிறுவனம் அண்டர் கிரவுண்ட் கேபிள் பணிகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. மேலும் இந்த நிறுவனம் கார்பன் டெக்னாலஜி எனர்ஜி என்று நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளது. அதுதவிர மென்பொருள் சார்ந்த சேவைகளையும் வழங்கும் வகையில் நிறுவனம் விரிவடைந்து வருகிறது.
தற்போது பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் புக் வேல்யூ 51.71 ஆகவும் பேஸ் வேல்யூ 10 ஆகவும் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளில் 73.5 3% ப்ரொமோட்டர் வசமும் 26.47 % சில்லறை முதலீட்டாளர்கள் வசமும் இருக்கிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications