3 ஆண்டுகளில் 4000% லாபம் கொடுத்த பங்கு.. கிரீன் ஹைட்ரஜன் துறையில் Advait Infratech புதிய சக்தி..!!

அத்வைட் இன்ப்ராடெக் லிமிடெட் நிறுவனம் மின் பரிமாற்றம், மின் துணை நிலையம் மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு துறைகளுக்கான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், உடனடியாக பயன்படுத்தும் தொலைத்தொடர்பு தயாரிப்புகள், பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவுதல், தொலைத்தொடர்பு தயாரிப்புகள் போன்ற வர்த்தகத்தையும் செயல்படுத்தி வருகிறது. 2023 நவம்பர் 23ம் தேதி நிலவரப்படி இந்நிறுவனம் வசம் ரூ.250.50 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் உள்ளது.

3 ஆண்டுகளில் 4000% லாபம் கொடுத்த பங்கு.. கிரீன் ஹைட்ரஜன் துறையில் Advait Infratech புதிய சக்தி..!!

தற்போது, இந்தியாவில் எலக்ட்ரோலைசர்கள் திறன் உற்பத்திக்காக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற்றுள்ளதாக அத்வைட் இன்ப்ராடெக் லிமிடெட் அறிவித்தது.

கிரீன் ஹைட்ரஜன் மாற்றத்திற்கான மூலோபாய செயல்கள் திட்டத்தின் கீழ் இந்த வாய்ப்பை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் முதல் பகுதியில் ஆண்டுக்கு 100 மெகா வாட் என நிர்ணயிக்கப்பட்ட வசதி திறன் கொண்டது.

இதன் எதிரொலியாக கடந்த சனிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே அத்வைட் இன்ப்ராடெக் நிறுவன பங்கு விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,169ஐ எட்டியது. இருப்பினும் வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.1,066.25ல் முடிவுற்றது. இன்றைய வர்த்தகத்தில் 1.49 சதவீத உயர்வுடன் 1082.10 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது.

முன்னதாக அண்மையில் நடைபெற்ற வைப்ரண்ட் குஜராத் உச்சிமாநாட்டில் அம்மாநில அரசாங்கத்துடன் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அத்வைட் இன்ப்ராடெக் நிறுவனம் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தில் குஜராத்தின் காடியில் ரூ.45 கோடி மதிப்பில் எரிபொருள் செல்/எலக்ட்ரோலைசர் ஆலை மற்றும் அவசரகால மறுசீரமைப்பு அமைப்பை நிறுவ உறுதியளித்தது.

இந்த மூலோபாய ஒத்துழைப்பு, மாநில ஒப்புதல்களால் எளிதாக்கப்படுகிறது, 120க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கும், பிராந்திய வளர்ச்சிக்கு எரிபொருளாக இருக்கும். மேலும் எங்களது திறன்களை மேம்படுத்தும், நிலையான வெற்றிக்கான எங்களது பார்வையுடன் முழுமையாக இணைகிறது என்று அத்வைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகளும் வலுவாக உள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர வருவாய் மற்றும் நிகர லாபம் முந்தைய 2021-22ம் நிதியாண்டை காட்டிலும் முறையே 40.99 சதவீதம் மற்றும் 40.24 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த ஓராண்டு காலத்தில் அத்வைட் இன்ப்ராடெக் நிறுவன பங்கின் விலை 180 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 4,000 சதவீதம் மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+