ஆசிய சந்தை 9 மாத சரிவினை சந்தித்துள்ள நிலையில் அமெரிக்க மற்றும் மற்றும் இங்கிலாந்து சந்தைகள் உயர்ந்துள்ளன. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போர் ஆகும்.
அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பும் 0.34 பைசா சரிந்து 69.85 ரூபாய் ஆக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 284.58 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டினை வெளியேற்றிய நிலையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் 611.01 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைப் புதன்கிழமை வாங்கி இருந்தனர்.
இன்றைய நிலவரம்
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 70.85 புள்ளிகள் என 0.20 சதவீதம் சரிந்து 35,574.55 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 20.15 புள்ளிகள் என 0.19 சதவீதம் சரிந்து 10,749.75 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையில் நுகர்வோர் சாதனங்கள், ரியாலிட்டி, ஐடி, டெக், ஹெல்த்கேர் மற்றும் மெட்டல் துறை பங்குகள் சரிந்து காணப்பட்டன. அதே நேரம் எப்எம்சிஜி, நிதி, ஆட்டோமொபைல் மற்றும் வங்கி துறைகளின் பங்குகள் லாபம் அளித்து இருந்தன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
யெஸ் வங்கி, ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, மஹிந்ரா & மஹிந்த்ரா பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
இன்போஸிஸ், வேதாந்தா, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் நட்டத்தினை அளித்து இருந்தன.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications