சென்னை: மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 0.02 சதவீதம் அதாவது 7.1 புள்ளிகள் உயர்ந்து 31,290.74 புள்ளிகளாக இன்றைய சந்தையை முடித்துக்கொண்டது. ஆனால் அதிகபட்ச புள்ளிகளான 31,523 -ஐ இன்றைய சென்செக்ஸ் தொட்டுப்பார்த்தது.
அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 3.6 புள்ளிகள் அதாவது 0.04 சதவீதம் உயர்ந்து 9,630 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.

வங்கித் துறையினை விடப் பிற துறைகள் அனைத்தும் இன்றைய மும்பை பங்கு சந்தைக் குறியீட்டில் சரிவைச் சந்தித்தது. அதே நேரம் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனப் பங்குகள் 1.79 சதவீதமும், மெட்டல் நிறுவனப் பங்குகள் 1.35 சதவீதமும், பொதுத் துறை நிறுவனப் பங்குகள் 1.21 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன.
சென்செக்ஸில் லாபம் அடைந்த டாப் 5 நிறுவனங்கள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (+ 1.5%), எச்டிஎஃப்சி (+ 1.41%), ரிலையன்ஸ் (1.06%), பஜாஜ் ஆட்டோ (+ 1.02%) மற்றும் ஏசிய பெயிண்ட்ஸ் (+ 0.71%).
நட்டம் அடைந்த பங்குகள்
ஓஎன்ஜிசி (-2.82%), எச்யூஎல் (-2.62%), லூபின் (-2.49%), பவர் கிரிட் (-2.11%) மற்றும் டாக்டர் ரெட்டி (-2.05%).


Click it and Unblock the Notifications