மும்பை: இன்று சென்செக்ஸ் தன் 37,410 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸை ஒட்டி நிறைவடைந்து இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பே, சென்செக்ஸ் டே சார்ட்டில் மார்ச் 11, 2019, மே 14, 2019, ஆகஸ்ட் 01, 2019 ஆகிய மூன்று தேதிகளும் வலுவான ட்ரிபிள் பாட்டமாக அமைந்திருப்பதைச் சொன்னோம். மேலே சொன்ன மூன்று தேதிகளுக்கும் 37,000 தான் ட்ரிபிள் பாட்டமாக நிற்கிறது.
இன்று மீண்டும் சென்செக்ஸ் தன் 37,410 புள்ளிகளைக் கடந்து நிறைவடைய பலமாக முயற்சித்தது ஆனால் முடியவில்லை. மதியம் 2.30 மணிக்கு மேல் தொடர்ச்சியான இறக்கத்தினால் 37,410-ஐக் கடக்க முடியவில்லை. எனவே 37,410 சென்செக்ஸின் வலுவான ரெசிஸ்டென்ஸ் என மீண்டும் உறுதியாகி இருக்கிறது. ஒருவேளை சந்தை நாளை ஏற்றம் காணத் தொடங்கினால் முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸான 37,410 புள்ளிகளைக் கடக்க வேண்டி இருக்கும். அதை நாளை எளிதில் கடக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படிக் கடந்துவிட்டால், அதன் பின் 37,750 ரெசிஸ்டென்ஸ் புள்ளிகளைக் கடக்க வேண்டி இருக்கும். ஆகவே இந்த இரண்டு புள்ளிகளையும் ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை சரியத் தொடங்கினால் 37,000 முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக இருக்கும். அதன் பின் வழக்கம் போல 36,400 அடுத்த வலுவான சப்போர்ட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இன்று காலை சென்செக்ஸ் 37,485 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி ஏற்றம் கண்டு 37,402 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 52 புள்ளிகள் அதிகம் ஏற்றம் கண்டிருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 11,094 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,053 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 6 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டிருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 13 பங்குகள் ஏற்றத்திலும், 17 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 20 பங்குகள் ஏற்றத்திலும், 30 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,644 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,268 பங்குகள் ஏற்றத்திலும், 1,212 பங்குகள் இறக்கத்திலும், 164 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,644 பங்குகளில் 35 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 198 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில், பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் ஃப்ளாட்டாக வர்த்தகமாயின. பொதுத் துறை வங்கிகள், ஆட்டோ, மெட்டல் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் கொஞ்சம் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. ரிலையன்ஸ், யெஸ் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, மாருதி சுஸிகி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.
சன்பார்மா, பார்தி இன்ஃப்ராடெல், டெக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், லார்சன் அண்ட் டியூப்ரோ போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், க்ராசிம், இந்தியா புல்ஸ் ஹவுசிங், பவர் கிரிட் கார்ப்பரேஷன், கெயில் போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.41-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 59.31 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications