பங்குச் சந்தையில் இந்திய ஐடி நிறுவனப் பங்குகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன. முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்ததால் ஐடி பங்குகள் இன்று விற்பனை அழுத்தத்தை சந்தித்தன. நிஃப்டி ஐடி குறியீடு ஒரே நாளில் 3.7 சதவீதம் சரிந்தது. முன்னணி ஐடி நிறுவனப் பங்குகள் 5.6 சதவீதம் வரை சரிந்தன. முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்ததால் நிஃப்டி ஐடி குறியீடு புதன்கிழமை 3.7 சதவீதம் சரிந்தது. சந்தை முடிவில் 41,820 ஆக இருந்தது. முதன்முறையாக 42,000க்கு கீழே சரிந்தது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் புதன்கிழமை கூடுகிறது. வட்டி விகிதங்கள் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் ஐடி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் லாபத்தைப் பெற விரும்புகின்றனர்.

கடந்த சில நாட்களாக இந்தப் பங்குகள் நல்ல லாபத்தைக் கொடுத்ததால், விற்க இதுவே சரியான நேரமாக கருதிய முதலீட்டாளர்கள் அதிக விற்பனையை பதிவு செய்துள்ளனர். இதனால், டாப் 10 ஐடி நிறுவனங்களின் பங்குகள் இன்று 5 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளன.
எம்பசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை இன்று 5.6 சதவீதம் குறைந்துள்ளது. எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3 முதல் 4 சதவீதம் வரை நஷ்டம் அடைந்தன. முன்னணி ஐடி நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ், கோ ஃபோர்ஜ் மற்றும் எல்டிஐ மைண்ட் ட்ரீ ஆகியவற்றின் பங்குகளும் 1.8 சதவீதத்தில் இருந்து 3.1 சதவீதமாக சரிந்தன. இதனால் ஐடி குறியீடு இன்று 3.7 சதவீதம் சரிந்தது. செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 2 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது
கடந்த சில மாதங்களாக ஐடி பங்குகள் வலுவாக ஏற்றம் கண்டு வருகின்றன. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் மற்றும் பிற முன்னணி ஐடி நிறுவனப் பங்குகள் புதிய உச்சத்தைத் தொட்டன. பல நாட்களாக ஐடி பங்குகளில் லாபம் தேடிக்கொண்டிருந்த முதலீட்டாளர்கள் தற்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர். ஜூன் மற்றும் ஆகஸ்ட் இடையே நிஃப்டி ஐடி குறியீடு 32 சதவீதம் உயர்ந்தது. இவற்றில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது.
அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்து வருவதால், பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்க உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. அதன்படி குறைந்தபட்சம் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதக் குறைப்பு சாத்தியம் என்று ஆய்வாளர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால் 50 புள்ளிகள் குறைக்கப்பட்டால் அதிக பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தால், பங்குச்சந்தையில் பெரும் ஏற்றம் ஏற்படும்
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications