அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து.. விமானப் பங்குகள் பலத்த சரிவு.!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 இன்று ஜூன் 12, 2025 மதியம் குடியிருப்புப் பகுதி ஒன்றில் விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்தத் துயரச் சம்பவம் விமானப் போக்குவரத்துத் துறையிலும், பங்குச் சந்தையிலும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட 242 பேர் இருந்தனர்.

இதில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன்காரர்கள், 7 போர்ச்சுகல்காரர்கள், ஒரு கனடா நாட்டவர் ஆகியோர் அடங்குவர். மேலும், இரண்டு பைலட்டுகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் பயணித்ததாக விமான ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் இதுகுறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து.. விமானப் பங்குகள் பலத்த சரிவு.!!

மீட்புப் பணிகள் மற்றும் விமானப் போக்குவரத்து: விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் மற்றும் அவசரகால மீட்புப் பணியாளர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். கடுமையான புகைமூட்டத்திற்கு மத்தியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, அகமதாபாத் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் கடும் சரிவு: இந்த விபத்துச் செய்தி பரவியவுடன் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. முக்கிய விமான நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

TAAL எண்டர்பிரைசஸ் பங்குகள் 3.84 சதவீதமும், இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (Interglobe Aviation Ltd.) பங்குகள் 3.01 சதவீதமும் சரிந்தன. அதேபோல், ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) நிறுவனத்தின் பங்குகள் 1.85 சதவீதமும், குளோபல் வெக்ட்ரா ஹெலிகார்ப் லிமிடெட் (Global Vectra Helicorp Ltd.) பங்குகள் 0.96 சதவீதமும் சரிந்தன. விமானப் பங்குகளில் மட்டுமல்லாமல், விமான சேவை நிறுவனங்களிலும் இதன் தாக்கம் தெளிவாகத் தெரிந்தது. விபத்து அறிக்கைகளுக்கு மத்தியில் இந்தப் பங்குகளின் வர்த்தக அளவுகள் கடுமையாக அதிகரித்தன. ஏர் இந்தியாவைச் சொந்தமாகக் கொண்ட டாடா குழும நிறுவனங்களும் (Tata Group) இன்று கடும் சரிவைச் சந்தித்தன.

டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (Tata Investment Corporation) பங்குகள் 3.62 சதவீதமும், டாடா கெமிக்கல்ஸ் (Tata Chemicals) 2.55 சதவீதமும் சரிந்தன. டாடா பவர் (Tata Power), டாடா எல்க்ஸி (Tata Elxsi), டாடா ஸ்டீல் (Tata Steel), டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (Tata Consumer Products) மற்றும் டாடா டெக்னாலஜிஸ் (Tata Technologies) உள்ளிட்ட பிற குழுமப் பங்குகள் ஒவ்வொன்றும் 2 சதவீதத்திற்கும் மேலாக சரிவைச் சந்தித்தன. உள்நாட்டு பங்குகள் போராடியபோதும் சந்தை சரிவு ஏற்பட்டது. உலகளவில், விமான உற்பத்தியாளரான போயிங் (Boeing) நிறுவனத்தின் பங்குகள், அமெரிக்க சந்தைக்கு முந்தைய அமர்வில் 5.14 சதவீதம் சரிந்து, குறைந்த வர்த்தகத்தையே சந்தித்தன. இந்தச் சம்பவம் பல்வேறு துறைகளில் ஆழமான அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விமான விவரங்கள் மற்றும் DGCA உறுதிப்படுத்துதல்: விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் (Boeing 787-8 Dreamliner) விமானம் என்றும், அதில் 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணித்ததாகவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA - Directorate General of Civil Aviation) உறுதிப்படுத்தியது.

விமானம் கேப்டன் சுமீத் சபர்வால் (Captain Sumeet Sabharwal) தலைமையில், முதல் அதிகாரி கிளைவ் குந்தர் (Clive Gunther) உடன் இருந்தது. கேப்டன் சுமீத் சபர்வால் 8200 மணிநேர அனுபவமுள்ள ஒரு LTC (Line Training Captain) ஆவார். துணை விமானிக்கு 1100 மணிநேர பறக்கும் அனுபவம் இருந்தது," என்று DGCA தெரிவித்துள்ளது. விமானம் அகமதாபாத்தில் இருந்து இந்திய நேரப்படி மதியம் 1:39 மணிக்கு புறப்பட்டது. இது ATC-க்கு (Air Traffic Control) 'MAYDAY' (அவசர உதவி கோரும் அழைப்பு) அழைப்பு விடுத்தது, ஆனால் அதன் பிறகு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. சம்பவ இடத்தில் கடுமையான கரும் புகை காணப்பட்டது என்று DGCA மேலும் கூறியது.

விபத்து நடந்த செய்தி பரவியவுடன், போயிங்கின் பங்குகள் அமெரிக்க சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் 7.8% சரிந்து $197.3 ஆக இருந்தது. விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பொதுமக்கள் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. இது விமானத் துறையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+