பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட எல்லா நிறுவனங்களும் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் மற்றும் போனஸ் பங்குகள் வழங்குவதில்லை. நல்ல லாபம் ஈட்டும் குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்குகின்றன. மேலும் எப்போதாவது சில நிறுவனங்கள் பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகள் வழங்குகின்றன.
ஆனால் ஒரு பென்னி ஸ்டாக் நிறுவனம் ஒன்று பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு அறிவித்துள்ளது. அந்நிறுவன பங்கின் விலை ரூ.5க்கும் குறைவு மற்றும் அதன் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பும் ரூ.120 கோடி தான்.

ஆனால் அந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு அறிவித்துள்ளது. மேலும் அந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை ஆண்டுகளில் 3 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. அந்த மல்டிபேக்கர் பங்கு நிறுவனம் அக்ஷர் ஸ்பின்டெக்ஸ் லிமிடெட்.
2013 ஜூனில் தொடங்கப்பட்ட குஜராத்தை சேர்ந்த அக்ஷர் ஸ்பின்டெக்ஸ் லிமிடெட் நிறுவனம் பருத்தி நூல் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.2.76 கோடியை இழப்பாக சந்தித்து இருந்தது.
இருப்பினும் இந்த நிதியாண்டின் முதல் 2 காலாண்டுகளில் லாபம் சம்பாதித்துள்ளது. 2023 ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.38.45 கோடியும், நிகர லாபமாக ரூ.90 லட்சமும் ஈட்டியிருந்தது. மேலும் கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.43.57 கோடியும், நிகர லாபமாக ரூ.90 லட்சமும் ஈட்டியுள்ளது.
அக்ஷர் ஸ்பின்டெக்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது கடனை குறைத்து வருகிறது. தற்போது இந்நிறுவனத்தின் கடன் ரூ.17.3 கோடியாக குறைந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்துக்கு புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்த பெக்சிம்கார்ப் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.171 கோடி மதிப்பிலான நூல் ஆர்டரை அக்ஷர் ஸ்பின்டெக்ஸ் பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்நிறுவனம் அண்மையில் 2023-24ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு ரூ.1 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.0.01 அல்லது ஒரு சதவீதம் இடைக்கால டிவிடெண்டாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அக்ஷர் ஸ்பின்டெக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு 1:5 என்ற விகிதத்தில் போனஸ் பங்கு வழங்க ஒப்புதல் அளித்து பரிந்துரை செய்தது. அதாவது இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 5 பங்குக்கும் ஒரு பங்கு போனஸாக வழங்கப்படும்.
இந்த செய்தி வெளியானவுடன் கடந்த 15ம் தேதியன்று பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை அப்பர்சர்க்கியூட் அடித்து ரூ.5ஐ எட்டியது. இருப்பினும் அதன் பிறகு முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்ததால் பங்கின் விலை சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று (ஜனவரி 16) அக்ஷர் ஸ்பின்டெக்ஸ் நிறுவன பங்கின் விலை ரூ.4.83ஆக இருந்தது. தற்போது இப்பங்கு விலை அதன் 52 வார குறைந்த விலையான ரூ.3.86லிருந்து 25 சதவீதம் அதிகமாக உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 300 சதவீதத்துக்கு மேல் ஆதாயம் கொடுத்துள்ளது. பென்னி பங்குதானே என்று இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் தற்போது இந்நிறுவனம் புதிய ஆர்டர்களை பெற்று வருவதால் எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சி காண வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications