வட கொரியாவின் ஏவிய ஏவுகணைகள் ஜப்பான் நாட்டின் அருகில் சென்ற காரணத்தால் சர்வசேத சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதன் பாதிப்பு இந்தியாவில் மிகப்பெரியதாக வெடித்துள்ளது. இதுமட்டுமல்லமல் மும்பை பங்குச்சந்தையில் இந்த வாரம் ஆர்டர்கள் முடிவடையும் காரணத்தால் இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 362 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
ஜப்பான்
வட கொரியா ஏவுகணை மூலம் ஜப்பான் நாட்டு பங்குச்சந்தை 0.6 சதவீதம் வரை சரிந்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆசிய சந்தையையும் பாதித்ததுள்ளது.
இந்தியா
இன்று மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகம் துவக்கம் முதல் தொடர் வர்த்தக சரிவில் மிகப்பெரிய அளவில் பாதித்தது. இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு சுமாக் 1.14 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்தது.
சென்செக்ஸ்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை கடந்த 4 வர்த்தக நாட்களில் பெற்ற உயர்வை இன்று ஓரே நாளில் இழந்தது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 362.43 புள்ளிகள் உயர்ந்து 31,388.39 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 116.75 புள்ளிகள் குறைந்து 9,796 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications