அல்பாலாஜிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அல்பாலாஜிக் இண்டஸ்ட்ரீஸ் ஒரு ஸ்மால்கேப் நிறுவனம். அல்பாலாஜிக் இண்டஸ்ட்ரீஸ் ஒரு ISO மற்றும் BIFMA சான்று பெற்ற ஸ்டோரேஜ் தீர்வு வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் ஆட்டோமொபைல், உணவு, மருந்து தொழில்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு வர்த்தக தீர்வு வழங்குகிறது.

அல்பாலாஜிக் இண்டஸ்ட்ரீஸ் பங்குச் சந்தையில் களம் இறங்கிய மூன்று மாதத்தில் இதன் பங்கு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் தற்போது அல்பாலாஜிக் நிறுவனம் பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகள் வழங்குவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அல்பாலாஜிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2023 ஜூலையில் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையை களம் இறங்கியது. இந்நிறுவனத்தின் ஐபிஓ கடந்த ஜூலை 3ம் தேதி தொடங்கி 6ம் தேதி முடிவடைந்தது. ஐபிஓ-வில் 13.42 லட்சம் பங்குகளை அல்பாலாஜிக் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டது.
ஐபிஓவில் அல்பாலாஜிக் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை ரூ.96ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஜூலை 11ம் தேதி பங்கு ஒதுக்கீடு நடைபெற்றது. அதற்கு அடுத்த மூன்றாவது நாளில் (14ம் தேதி) மும்பை பங்குச் சந்தையில் அல்பாலாஜிக் இண்டஸ்டரீஸ் பங்குகள் பி.எஸ்.இ. எஸ்.எம்.இ. குறியீட்டின் கீழ் பட்டியலிடப்பட்டது.
கடந்த ஜூலை முதல் இதுவரையிலான காலத்தில் அல்பாலாஜிக் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 240 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் இந்த பங்கில் முதலீடு செய்தவர்கள் மிகவும் குஷியாக உள்ளனர். இந்நிலையில், அல்பாலாஜிக் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. அல்பாலாஜிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அல்பாலாஜிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்க பரிந்துரை செய்துள்ளது. இது (போனஸ் பங்கு) பங்குதாரர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இதுவரை அல்பாலாஜிக் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை குறைந்தபட்சமாக ரூ.95.60க்கும் அதிகபட்சமாக ரூ.368க்கும் சென்றது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வியாழக்கிழமையன்று அல்பாலாஜிக் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 5 சதவீதம் குறைந்து ரூ.326.10ஆக சரிந்தது. நேற்றும் இப்பங்கின் விலை 5 சதவீதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications