மருந்து துறையை சேர்ந்த நிறுவனம் அமி ஆர்கானிக்ஸ். பிஎஸ்இ ஸ்மால்கேப் பங்கான இந்நிறுவனம் கடந்த பிப்ரவரியில் பங்கு பிரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளதாக அறிவித்தது. 1:2 என்ற விகிதத்தில் பங்குகளை பிரிக்க உள்ளதாக அமி ஆர்கானிக்ஸ் தெரிவித்தது. இந்நிறுவனத்தின் வரலாற்றில் அதன் முதல் பங்கு பிரிப்பு இதுவாகும். 2025 பிப்ரவரி 21ம் தேதியன்று அமி ஆர்கானிக்ஸ், பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், ரூ.10 முகமதிப்பு கொண்ட ஈக்விட்டி பங்கினை ரூ.5 முகமதிப்பு கொண்ட 2 ஈக்விட்டி பங்குகளாக பிரிக்கப்படும்.
இது அஞ்சல் வாக்குச் சீட்டு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களின்கீழ தேவைப்படும் எந்தவொரு ஒழுங்குமுறை மற்றும் சட்டரீதியான ஒப்புதல்கள் மூலம் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை அமி ஆர்கானிக்ஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பங்குச் சந்தை அமைப்பிடம் இந்நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில், நிறுவனத்தின் தற்போதைய பங்குகளை பிரித்தல் செய்வதற்காக, பங்குதாரர்களின் உரிமையை நிர்ணயிப்பதற்கான பதிவு தேதியாக ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

அதாவது ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கு, முழுமையாக செலுத்தப்பட்டு ரூ.5 முகமதிப்பு கொண்ட 2 பங்குகளாக பிரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் அமி ஆர்கானிக்ஸ் நிறுவனம் வருவாயாக ரூ.687.58 கோடியும், நிகர லாபமாக ரூ.43.69 கோடியும் ஈட்டியுள்ளது. மேலும் 2024 டிசம்பர் காலாண்டில் அமி ஆர்கானிக்ஸ் நிறுவனம் வருவாயாக ரூ.270.94 கோடியும், நிகர லாபமாக ரூ.45.31 கோடியும் ஈட்டியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் அமி ஆர்கானிக்ஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 8.86 சதவீதம் குறைந்து ரூ.2,293.90ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.9,389 கோடியாக உள்ளது. 2024 ஜூன் 4ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே அமி ஆர்கானிக்ஸ் பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.1,014.45க்கு சென்றது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது.
கடந்த பிப்ரவரி 5ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே அமி ஆர்கானிக்ஸ் பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.2,643.50ஐ எட்டியது. தற்போது இந்நிறுவன பங்கின் விலை அதன் உச்ச விலையை காட்டிலும் சுமார் 14 சதவீதம் குறைவாக உள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications